முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - நெடுங்கேணி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த
விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த வசந்தபுரம் கற்சிலைமடுவினை சேர்ந்த ஜெனந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பார ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக