siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஊரிக்காட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இளைஞன் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதான குறிப்பிடப்படுகின்றது.
இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார். 
ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 
இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 
குறித்த சடலத்தில் சில இடங்களில் எரிகாயம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக