siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 2 பிப்ரவரி, 2019

.கந்தரோடையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் 20 வயது இளைஞனொருவர் சனிக்கிழமை(02) காலை வீட்டின் பூஜை அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
சுன்னாகம் கந்தரோடை கந்தசாமி வீதியைச்
 சேர்ந்த நாதன் ஜசிந்தன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த இளைஞர் வழமை போன்று நேற்றிரவு(01) பூஜை அறையில் உறக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை இளைஞனின் தாயார் பூஜை அறைக் கதவைத் திறந்து பார்த்த 
போது, தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளைஞன் படித்து முடித்து விட்டுக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இதேவேளை,சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், ஒரு வித மனவிரக்தியே தற்கொலைக்கான காரணமாகவிருக்கலாமென சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக