siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 6 பிப்ரவரி, 2019

பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் கடமை நேரத்தில் பாவிக்கத்தடை

கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.
தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன
 தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு
 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை 
நடத்துகின்றோம்.
இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்று தான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை .ஆனால் சம்பளம் கிடைக்கும்.
அரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போதே காலை 9.30 ஆகி விடுகிறது. அதன்பின்னர் மெதுவாக தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத் தான், 9.30 க்கு தத்தமது வேலைகளை அரச பணியாளர்கள் 
ஆரம்பிக்கின்றனர்.
வேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து ‘டொக் டொக்’ என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து ‘மேசேஜ்’ அனுப்பத் தொடங்குவர். பிறகு ‘ஃபேஸ்புக்’ பார்க்கத்
 தொடங்குவர்.
அரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா? என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன், இரு மணிநேரம் கூட 
அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும் வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே ‘ஐஸ்’ அடித்துவிட்டுச் செல்கின்றனர்.
எனவே, யாராவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத் தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று 
விசாரணை நடத்துவேன்.
இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும், என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக