நாட்டில் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக