siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் முத்துதம்பி இரத்தினசிங்கம் 29.04.20

உதிர்வு, -29. 4. 2020. யாழ் அச்சுவேலி தோப்பை பிறப்பிடமாக. கொண்ட முத்துதம்பி இரத்தினசிங்கம் அவர்கள்   29. 4. 2020. அன்று காலமானார் இவர். காலம்சென்ற முத்துத்தம்பி தங்கச்சிப்பிள்ளை. அவர்களின் சிரேத்தபுத்திர்ரும். வதனலோயினின் அன்புக்கணவரும். யசோதா. தீபா. அவர்களின் அன்புத் தந்தையும். குலசிங்கம். காலம்சென்ற பாலசிங்கம். மற்றும்ஞானேசுவரி(றாணி)இறாயேந்திரம்அவர்களின்பாசமிகுசகோதர்ரும் ஆவார் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

புதன், 29 ஏப்ரல், 2020

பொல்பித்திகம வில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஆபத்தான நிலையில்

பொல்பித்திகம பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணொருவர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிய மூன்று  நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் 134 பேர் குணமடைந்து  வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக  சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 481 பேர் தொடர்ந்தும்...

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை

மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..தேசிய அடையாள அட்டைச் சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படும் சட்டத்தை  மீறுபவர்கள் குறித்து பொலிஸ் பாதுகாப்பு படையினரும் விழிப்புடன், இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.சிவில் ஆடையில் பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.எப்படியிருப்பினும்...

வீதியால் சென்ற முதியவர் யாழில் தீடிரென வீழ்ந்து மரணம்

வீதியால் சென்ற முதியவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.யாழ் நகர் நாவலர் வீதி ஆனைப்பந்திச் சந்தியில் இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மரணமடைந்தவர் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது 65) என இனங்காணப்பட்டுள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு  வருகின்றனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

கனடாவில் யாழ் இந்துக் கல்லுாரி பழைய மாணவன் ஈஸ்வரபாதம் கிருபாகரன் மரணம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1983 ஆம் ஆண்டு உயர்தர வகுப்புப் பிரிவைச் சேர்ந்த பழையமாணவரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் அங்கத்தவரும், அதன் செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்தவருமான ஈஸ்வரபாதம் கிருபாகரன் (கிருபா) அவர்கள் ரொரன்றோ, கனடாவில் ஏப்ரல் 24, 2020 அன்று  கொரோனாவுக்கு இலக்காகி இயற்கையெய்தினார். இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கொழும்பு காசல் மருத்துவமனை கொரோனாவால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள் காரணமாக பற்பல நாடுகள் எல்லைகளை மூடி அவசர நிலை பிரகடனம் செய்திருந்தது.அந்த வகையில் இலங்கையிலும் சில தொற்றுக்கள் இருந்தமையால் ஊரடங்கு  அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.கடந்த சில வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்படாமல் இருந்த  நிலையில் நாளைய தினம் சில மாவட்டங்கள் தவிர்த்து பல பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக இன்றைய தினம் உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில்,  காசல் மருத்துவமனையில்...

அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்காக மட்டும் திங்கள் முதல் விசேட ரயில் சேவை

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் புகையிரத திணைக்களம் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அலுவலக ஊழியர்களின் வசதி கருதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் சிறப்பு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்  அறிவித்துள்ளது. முதற்கட்டமாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, தனியார்துறையினர் மாத்திரமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திணைக்களம் அறிவித்துள்ளது.நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம்...

வியாழன், 16 ஏப்ரல், 2020

அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகியது

 நாட்டில் 5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த  கொடுப்பனவு தொடர்பில் கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது .இந்தநிலையில் அதனை சுட்டிக்காட்டியே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம்  குறிப்பிட்டுள்ளது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி...

கனடாவில் கொரோனாவிற்கு பலியான ஈழத்து தமிழ்த் தம்பதி

யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி நேற்று முன்தினம்- 14-04-2020.செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி-15-04-2020. நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இருவரும். கனடாஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள்.இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லமான Seven Oaks இல் சுமார் 25 இற்கும் அதிக கொரோனா உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 248 முதியவர்களில் 82 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். நீண்ட...

லண்டனில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மிருதங்க வித்துவான் பலி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் உயிரிழந்தார்.மாஸ்டரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியே.16-04-2020. இன்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நோர்த் விக் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சில தினங்களாக கோமா நிலையில் இருந்தார். மேலதிக...

நாட்டில் அரச கடமைக்கான அடையாள அட்டையுடன் ஊர் சுற்றிய ஜோடிக்கு

அத்தியாவசிய சேவைக்காக பயன்படுத்தலாமென அரசாங்கம் அறிவித்த கடமை அடையாள அட்டையை பாவித்து ஊர் சுற்றிய ஜோடியொன்று பொலிசாரிடம் சிக்கியது.இலங்கை  மின்சாரசபையின் கடமை அடையாள அட்டையை பாவித்து இவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, ஹம்பாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கெக்கிராவவை  சேர்ந்த 32 வயதான இளைஞன் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பணிபுரிகிறார். கண்டி, பிலிமத்தலாவயில் வசிக்கும் 20 வயது யுவதியுமே கைதானார்கள். அவர்களை ஹம்பாந்தோட்டை...

புதன், 15 ஏப்ரல், 2020

பலாலியில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருவருக்கு கொரோனா

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 போில் நேற்றய தினம் 8 பேர் தொற்றுக்குள்ளான நிலையில், இன்றைய தினம் இருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள்  எண்ணிக்கை 17 ஆக அதிகரித்திருக்கின்றது. இன்றைய தினம் 23 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம்  காணப்பட்டிருக்கின்றனர். இன்று 23 பேருக்கு கொரோனா பரிசோதனைகள்...

நாட்டில் தாய்மாருக்கு ஓர் தகவல் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அடுத்த வாரம் முதல்

குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்காக, கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு முன்னர் நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் அடுத்த  வாரம் முதல் குழந்தைகளை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாகான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று சுகாதார செய்யலாளர் தெரிவித்தார்.இதற்கிடையில், குழந்தைகள் மற்றும் எதிர்பார்க்கும் தாய்மார்களின் வீடுகளுக்கு திரிபோஷா  மற்றும் பிற ஊட்டச்சத்து பொருட்களை  விநியோகிக்க...

திங்கள், 13 ஏப்ரல், 2020

யாழில் ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பனின் அதிகபட்ச விலை நிர்ணயம்

ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகளின் விலையை 115 ரூபாவாக நிர்ணயிக்க, பாவனையார் அதிகார சபைக்கு சிபாரிசு செய்துள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று யாழில் அரசி அலை உரிமையாளர்கள், வர்த்தகர் சங்கத்துடன் நடந்த கலந்ரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.அவர் மேலும்  தெரிவிக்கும் போது; ஏற்கனவே அரசினால் சில அரிசி வகைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தில்...

சனி, 11 ஏப்ரல், 2020

உணவை பெறுவதில் சிரமத்திற்குள்ளாகி யாழ் நகரில் யாசகர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் யாசகம் பெற்று வந்த ஒருவர் உணவின்றி இன்று உயிரிழந்துள்ளார்.கொரோனா அச்சத்தால் முழு நாடும் முடக்கப்பட்டு, ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், யாசகர்கள் உணவை பெறுவதில் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.  அத்துடன், தெருவோரம் சுற்றித்திரிந்த கால்நடைகளும் உணவின்றி அல்லாடி வந்தன.யாழ்ப்பாணம் தொடர்ந்து நீண்டநாட்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில், யாழ் நகரில் யாசகம் பெற்று  வந்த ஒருவர் .11.04.2020.இன்று உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம்...

புதன், 8 ஏப்ரல், 2020

அமரர். சபாரத்தினம் ஞானமணி, 4ம் ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2020

உதிர்வு .08.04.2016 - நினைவஞ்சலி- 08-04-2020         யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த   அமரர்.  சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 4ம் ஆண்டு .நினைவஞ்சலி 08-04-2020 இன்று  காலச்சுழற்சியில் நான்கு  ஆண்டுகள்  கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை  நித்தம் நாம்  இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத...

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் அமரர் கிருஷ்ணசாமி சியாமளன் -04-04-20

யாழ் மீசாலை மேற்கு மீசாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்து நாட்டில்  வசித்துவந்த அமரர் கிருஷ்ணசாமி  சியாமளன் -04-04-20 20-  சனிக்கிழமை அன்று காலமானார் இவர்  யாழ் வீரசிங்கம் மத்திய கல்லூரியின் இளைப்பாறிய இசை ஆசிரியையின் மகனும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளர் திவ்வியன் அவர்களின் சகோதரனும் ஆவர்   (1998...) கிருஸ்ணசாமி சியாமளன் கொரோனா நோய் தொற்றின் காரணமாக இங்கிலாந்து நாட்டில் இறைவனடி  சேர்ந்து...

சனி, 4 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல்,திருமதி வசந்தன் பராசக்தி 03-04-20

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்டதிருமதி   வசந்தன் பராசக்தி அவர்கள் 03-04-2020 வெள்ளிக்கிழமை சுகவீனம் காரணமாக அவுஸ்ரேலியாவில் உயிரிழந்து்ளளதாக தெரியவருகின்றது. இவரது உயிரிழப்புக்கு கொரோனாவே காரணம் என சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிவருகின்றது. இதே வேளை இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே இவர் மரணமடைந்ததாகவும் இவருக்கு நெருங்கமானவர்களனி் முகப்புத்தகங்களில் தகவலகள்  வெளியாகியுள்ளது. இவ்...

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல்,அமரர் கோணேஸ்வரன் சிவகௌரி 02-04-20

யாழ் சிறுப்பிட்டி சந்திரசேகரம்பிள்ளை சேரின் (முன்னாள் அதிபர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி) மகள் கோணேஸ்வரன் சிவகௌரி அவர்கள் 02-04-2020 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக்கிரியை நல்லடக்கம் பின்னர் அறியத்தரப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த...

வியாழன், 2 ஏப்ரல், 2020

மரண அறிவித்தல் அமரர் பாலசிங்கம் சிவகுமார் 01.04.20

     மலர்வு   08-10.1976    உதிர்வு, -01. 04-2020 யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம்  சிவகுமார் (சிவா) 01.04.2020 புதன் கிழமை அன்று  காலமார்.அன்னார் ரதிமதி யின்  அன்புக்கணவரும் அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், ராஜேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின்  அன்பு மகனும், காலஞ்சென்ற...

அமரர் தம்பு செல்வராஜா 6ம் ஆண்டு நினைவஞ்சலி.02.04.20

மண்ணில் 12, ஆகட்ஸ்.1933. — விண்ணில் :2 ஏப்ரல் 2014 திதி -.02.04.2020 யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பு செல்வராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. எமக்கு  உயிர் தந்தஉங்கள்  உயிா் மனறந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எனது மனதில் வாழூம் தெய்வத்தின் நினைவு நாள்  02,0419,இன்று எங்கள் வாழ்வில் ஒளியேற்றி ஐந்தாண்டு   போயும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!! எம்மை...

மரண அறிவித்தல் திரு மகேந்திரன் ராஜரத்தினம்-31-03-20

                                      தோற்றம்-06 -11- 1947-மறைவு-31-03- 2020 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் ராஜரத்தினம் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார்,  கரந்தன் நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் தம்பையா அன்னலட்சுமி தம்பதிகளின் செல்வப்...