எதிர்வரும் திங்கட் கிழமை முதல் புகையிரத திணைக்களம் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.அலுவலக ஊழியர்களின் வசதி கருதி நாளை மறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் சிறப்பு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம்
அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, தனியார்துறையினர் மாத்திரமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திணைக்களம் அறிவித்துள்ளது.நாடு
முழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பேருந்துகளும் 400 தொடருந்துகளும் நாளைமறுதினம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக