யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி நேற்று முன்தினம்- 14-04-2020.செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி-15-04-2020. நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இருவரும். கனடாஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள்.இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லமான Seven Oaks இல் சுமார் 25 இற்கும் அதிக கொரோனா உயிரிழப்பு
ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 248 முதியவர்களில் 82 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
நீண்ட கால பராமரிப்பு இல்லமான Seven Oaksஜகவல்லால் நேரு உலகத்தமிழர் இயக்கத்தில் மொழி பெயர்பாளராகப் பணியாற்றினார், என்பதுடன் உலகத்தமிழர் பத்திரிகையில் பல
அரசியல் கட்டுரைகளை எழுதியதுடன் கனடியச் செய்திகளின் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.1980 களின் இறுதியில், கனடா வந்த நேரு, தனது 67ம் வயதில் ரொறன்ரோ
யோக் பல்கலைக் கழகத்தில் BA சிறப்பப் பட்டத்தை படித்து முடித்தார். அதன் பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பிறன்ச் (French) மொழியையும் கற்றுத் தேறியவராவார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக