siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 ஏப்ரல், 2020

யாழில் ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பனின் அதிகபட்ச விலை நிர்ணயம்

ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகளின் விலையை 115 ரூபாவாக நிர்ணயிக்க, பாவனையார் அதிகார சபைக்கு சிபாரிசு செய்துள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.மகேசன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் அரசி அலை உரிமையாளர்கள், வர்த்தகர் சங்கத்துடன் நடந்த கலந்ரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.அவர் மேலும்
 தெரிவிக்கும் போது;
ஏற்கனவே அரசினால் சில அரிசி வகைகளின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தில் 95 வீதமான மக்கள் நுகரும் ஆட்டக்காரி, மொட்டைக்கறுப்பன் வகை அரிசிகள் 140, 145 ரூபாவாக விற்கப்படுகிறது. வர்த்தமானி அறிவித்தலில் தவிர்க்கப்பட்ட இந்த
 இரண்டு அரசிகளின் விலையை, பாவனையாளர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்டத்தின் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் நிர்ணயிக்கும்
 கூட்டம் இன்று நடைபெற்றது.அரிசி 
ஆலை உரிமையாளர்கள் வர்த்தகர்களுடன் கலந்ரையாடப்பட்டது. நெல் உற்பத்தி யாழ் மற்றும் அண்டிய பகுதிகளிலேயே நடைபெறுகிறது. ஏனைய வகைகளை விட, இந்த அரிசின் உற்பத்தி 
வித்தியாசமானது.
ஏனைய காலப்பகுதியில் ஏனைய அரிசிகளின் விலைகளை விட 10, 20 ருபாவே இந்த வகைகள் அதிகரித்திருந்தது. தற்போது மிக அதிக விலையில் விற்கப்படுகிறது.பல விடயங்களையும் கருத்தில் எடுத்து இரண்டு அரிசிகளின் விலையாக 125 ரூபாவாகவும், இரண்டு 
அரிசிலிருந்தும் பெறும் தீட்டல் 115, உடையல் 110 ரூபாவாகவும் சிபாரிசு செய்துள்ளோம். அந்த தீர்மானத்தை பாவனையாளர் அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
அவர்களின் அங்கீகாரத்தை பெற்று நடைமுறைப்படுத்துவோம். ஒரு மாதத்திற்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு வர்த்தகர்களையும் கோரியுள்ளோம் எனவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.மகேசன்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக