siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கொழும்பு காசல் மருத்துவமனை கொரோனாவால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள் காரணமாக பற்பல நாடுகள் எல்லைகளை மூடி அவசர நிலை பிரகடனம் செய்திருந்தது.அந்த வகையில் இலங்கையிலும் சில தொற்றுக்கள் இருந்தமையால் ஊரடங்கு 
அமுல்ப்படுத்தப்பட்டிருந்தது.கடந்த சில வாரங்களாக ஊரடங்கு தளர்த்தப்படாமல் இருந்த
 நிலையில் நாளைய தினம் சில மாவட்டங்கள் தவிர்த்து பல பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக இன்றைய தினம் உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 
காசல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு
 கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் அம் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.பொரளை காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து காசல் வைத்தியசாலை தற்காலிகமாக 
மூடப்பட்டுள்ளது.கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் காசல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
.இதனையடுத்து உடனடியாக கர்ப்பிணிப் பெண் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) மாற்றப்பட்டார்.
எனினும், காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இதுவரையில் இலங்கையில் 260 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதோடு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 96 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் சு
ட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






0 கருத்துகள்:

கருத்துரையிடுக