கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர்.இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் கற்றுக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் உயிரிழந்தார்.மாஸ்டரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியே.16-04-2020. இன்று அதிகாலை 1
மணிக்கு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, நோர்த் விக் பார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சில தினங்களாக கோமா நிலையில் இருந்தார். மேலதிக சிகிச்சைக்காக
அவரை, Central London வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும். அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற
முடியவில்லை என அங்கு பணிபுரியும் தமிழ் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக