siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 22 ஏப்ரல், 2021

விரைவில் கொவிட்-19 புரதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, விரைவான அதிகரிப்பு, தற்போது நாட்டில் பரவுகின்ற வைரஸ்கள் எந்த வகையானவை  மற்றும் அவை
 எவ்வாறு திரிபடைகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura ) இந்தப் பரிசோதனையை 
ஆரம்பித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் பல உண்மைகள் வெளிப்படும் என அதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா  வைரஸ் குறித்து தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் புரதங்களை அடையாளம் காண்பதில் சிரமத்தைக் காட்டுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
புரதப் பரிசோதனை தொடர்பான இயந்திரத்தை இலங்கைக்குக் கொண்டு வருமாறு கோரப் பட்டுள்ளதாகவும், இது குறித்த சோதனைகளை அடுத்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் 
மேலும் தெரிவித்தார்.
குறித்த பரிசோதனை இயந்திரமானது ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்குள் முடிவுகளைக் காட்டக்கூடும் என அவர்
 தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். அதில் இளைஞர்களே  அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை இனம் காண சரியான பரிசோதனை மேற்கொண்டு இது தொடர்பாகத் தகவல்களை வழங்க முடியும் என அவர் 
மேலும் தெரிவித் துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக