siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு குடும்பஸ்தர் ஒருவர் பலி


வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர்
 வாள் வெட்டுக்கு
இலக்காகி  உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு. கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அல்வாய் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றைய தினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது என  காவல் துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக