யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்து, தப்பிச் சென்ற ;பிக்-அப் வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளையடுத்து துன்னாலை பிரதேசத்தில் குறித்த ;பிக்-அப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது நெல்லியடி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதனை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை முள்ளி
பகுதியில், கட்டளையை மீறி பயணித்த மேற்படி பிக்-அப் ;வாகனம் மீது, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்று(16) காலை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
எவ்வாறிருப்பினும், அந்த ;பிக்-அப் ரக வாகனம் தொடர்ந்தும் நிறுத்தாமல் பயணித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த வாகனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி கெப்பில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக