siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 21 ஏப்ரல், 2021

அச்சுவேலிப் பொலிஸாரால் காரில் ஹெரோயின் கடத்திய தம்பதி கைது

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலிப் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
வல்லைச் சந்தியில் வைத்து 20-04-2021.அன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 40 வயதுடையவரும் 38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர் எனவும்,சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என அச்சுவேலிபொலிஸார்
 தெரிவித்தனர். 
அத்துடன் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்
 பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக