siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

மரண அறிவித்தல் திருமதி வீரசிங்கம் தில்லையம்மா 31-08-2021

தோற்றம்  11-05-1928 -மறைவு  31-08-2021 யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி வீரசிங்கம் தில்லையம்மா.31-08-2021. அன்று  காலமாகி விட்டார். அன்னார் (காலம் சென்ற போலீஸ் உத்தியோகத்தர்) வீரசிங்கம்  அவர்களின் அன்பு மனைவியும்,  சூரியகுமாரன்  வீரசிங்கம், விமலாதேவி வேலும்மயிலும்,சந்திராதேவி கணேஸ்வரன், இந்திரகுமாரன்  வீரசிங்கம்  மற்றும் ரஞ்சினிதேவி ஜெயராஜா ஆகியோரின் அன்புத்தாயாரும், ...

உறவினர்களுக்கு பாணந்துறை போதனா வைத்தியசாலையில் மாற்றி கொடுத்த சடலங்கள்

பாணந்துறை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மாறுபட்டுள்ளன.குறித்த வைத்தியசாலையின் விடுதி எண் 7 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த 89 மற்றும் 93 வயதுடைய இரண்டு பெண்களின் உடல்கள் ஒருவருக்கொருவர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வர்களின் மொரட்டுவ, பகுதியை சேர்ந்த 89 வயது முஸ்லிம் பெண் கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்தார். அவரது உடல் 26ம் திகதி பாணந்துறை வீரசிங்க மாவத்தையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.எனினும்,...

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

நாட்டில் இதுவரை 2,000 ரூபாவை பெறாதவர்ககளுக்கு வெளியான செய்தி

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு எதிர்வரும் தினங்களில் வழங்க பிரதேச செயலாளர் மட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளபப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,இதுவரையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ் மாவட்டத்தில்...

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

நாட்டில் அடுத்த மாதம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை உச்சம் கொடுக்கும் சூரியன்

நாட்டில் அடுத்த மாதம் அதாவது செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.இந்த விடயத்தை வானிலை ஆய்வு மையம் 28-08-2021.அன்று தெரிவித்துள்ளது.இதன்படி இன்று மதியம் 12.11 அளவில் சூரியன் சங்குப்பிட்டி, யாழ்ப்பாணம் பலாலி போன்ற இடங்களில் சூரியனின் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் 28-08-2021.அன்று முதல் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக...

சனி, 28 ஆகஸ்ட், 2021

நாட்டில் சீனியின் விலை அதிகரித்ததால் தேநீர் மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

இலங்கையில் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் சீனி தட்டுப்பாடு ஏற்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் சீனியின் விலையை குறைக்க முடியாதென சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கின்றது.இதேவேளை, ஒரு கிலோ சீனியின் விலை 200 ரூபாவை கடந்துள்ள...

குடும்ப முரண்பாடு காரணமாக பாரிஸில் தந்தையால் மகன் படுகொலை

பாரிஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குடும்ப முரண்பாடு காரணமாக தந்தை ஒருவரால் மகன் படுகொலை செய்தமை அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.பாரிஸின் புறநகர் பகுதியான செய்ன்-சன்-துனி மாவட்டத்திற்கு Villemomble பகுதியில் இந்த சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அங்குள்ள வீடு ஒன்றில் கெவின் என அழைக்கப்படும் ஏழு வயது சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சோபா இருக்கையில் சடலமாக...

சம்பூர் நாவலடியில் கோர விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்விபத்து இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர்-சம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவராசா நவநீதன் வயது (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்த நபரின் சடலம் தற்போது சம்பூர்...

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை நாட்டில் உயர்வு புதிய விலை விபரங்கள்

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாகவே, சில்லறை விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.சதொச மொத்த விற்பனை நிலையத்தில் 115 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு சீனியின் விலை, தற்போது 120 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன், ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு விலை 250 ரூபா வரை அதிகரித்துள்ளது.இதன்படி...

மரண அறிவித்தல் வாரித்தம்பி நடராஜா ( பஞ்சட்ச்சரம்) 27.08.21

தோற்றம்-29 04 1940--மறைவு-27 08 2021கிளிநொசசி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராஜா( பஞ்சட்ச்சரம்) அவர்கள் 27-08-2021 வெள்ளிக்கிழமை அன்று கிளிநொசசி யில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலிங்கமணி (சிவலிங்கம் ) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெபா...

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

நாட்டில் தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வு குறித்த தகவல்!

தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வானது, குறித்த பகுதியின் நிலத்தில் ஏற்பட்டதல்ல என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்இந்நில அதிர்வானது இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலையில், நாட்டில் உணரப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இவ்வாறான நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நில...

புதன், 25 ஆகஸ்ட், 2021

இலங்கை பெண் சுவிஸ் சிறையில் தற்கொலை நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு

சுவிஸ் சிறையில் தற்கொலைக்கு முயன்று பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை பெண் வழக்கில் நான்கு சிறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதுஇச்சம்பவம் சுவிஸில் ரிமாண்ட் சிறையில் உள்ள ஒரு அறையில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,பேசல் பல்கலைக்கழக மருத்துவமனையில் கடந்த 2018 ஜூன் மாதம் 29 வயதான இலங்கை பெண் ஒருவர் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமடைந்தார்.இது தொடர்பான சம்பவம் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி,வாகோஃப்...

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் அவுஸ்ரேலியாவில் தீ மூட்டித் தற்கொலை

அவுஸ்ரேலியாவில் இலங்கைத் தமிழ்க் குடும்பஸ்தர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சம்பவத்தில் திருகோணமலையை சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளகளின் தந்தை ஒருவரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். உள்நாட்டு போர் காரணமாக அவர் சிறு குழந்தையாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக அறியப்படுகிறது.அதன்பின்னர் 2013ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து புகலிடம் கோரினார்.இந்த நிலையில்,...

நாட்டில் இன்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பி.ப. 2மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதுஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய...

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தேவையின்றி யாழில் சுற்றித்திரிபவர்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனை

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் போது யாழ்.நகரில் நடமாடியோருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாடு பூராகவும் தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ் நகரில் நடமாடி யோருக்கு யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுட்டது.யாழ்ப்பாண பிரதேச செயலர் யாழ்ப்பாண மாநகரசபை சுகாதாரப் பிரிவினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நகரப்பகுதியில்...

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

இலங்கையில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என தெரிவிப்பு

நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு கிடையாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வெளியான தகவல்களை அடுத்து பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.எனினும், நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் கிடையாது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது குறித்து தாமே மக்களுக்கு முதலில் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.தாம்...

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

யாழ் சுப்பர் மட பகுதியில் சடலம் அடையாளம் காணப்பட்டது

யாழ்  பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.  குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி ...

யாழ் வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராற்றில் குடும்பஸ்தர் கொலை

வல்வெட்டித்துறையில் 16-08-2021.அன்று குடும்பத்தகராறு காரணமாக இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தந்தையான இளங்குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.வல்வெட்டித்துறையில் 16-08-2021.அன்று  நள்ளிரவு 12.30 மணிக்கு  இடம்பெற்ற இச்சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த  சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச்...

காத்தான்குடியில் போலியான இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட கார்கள் கண்டுபிடிப்பு.

போலியான ஒரே இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட இரு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.இதில் ஒரு காரை காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் 16-08-2021.அன்று  கைப்பற்றியுள்ளனர். CP CAI .9272 . இலக்கங்கங்கள் பொறிக்கப்பட்ட காரையே காத்தான்குடியில் வைத்து மட்டக்களப்பு விஷேட பொலிஸ் பிரிவினர் கைப்பற்றி காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.குறித்த போலி இலக்கம்...

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கைதடி வீதியில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளர் விபத்தில் மரணம்

இன்று கோப்பாய் வீதி விபத்தில் வடமாகாண கல்வி அமைச்சின் பணியாளரான சாந்தி கருணேஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் கோப்பாய் – கைதடி வீதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே குறித்த இளம் குடும்ப பெண் ; உயிரிழந்துள்ளார்.குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் தம்பதியினர் சென்றுகொண்டிருந்த வேளை,  பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர்களை முந்தி செல்ல முற்பட போது , மோட்டார் சைக்கிளுடன்  மோதி  விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது பின் இருக்கையில்...

சனி, 14 ஆகஸ்ட், 2021

அமரர்கள் சுரேஸ்குமார் சுகதீபா 10ம் ஆண்டு நினவஞ்சலி ,14.08.21

திதி 14-08-2021 இன்று  யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாக்கவும் கோண்டாவில் மற்றும் நவற்கிரியைஆகியோரின்  வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  அமரர்கள்( வீரசிங்கம்,தம்பதிகளின் புதல்வன்)  சுரேஸ்குமார்,(சந்திரசேகரம் தம்பதியினரின் புதல்வி) சுகதீபா ( சுரேஸ்குமார்கோண்டாவில்- சுகதீபா.நவற்கிரி )-ஆகியோரின் பத்தாம் ஆண்டு நினவஞ்சலி திதி 14-08-2021 இன்று  அவர்களின்.திதி 14-08-2021 சனிக்கிழமை இன்று   இவ் அறிவித்தலை உற்றார்,...