siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

கஹவத்துகந்த பகுதியில் பாரிய சத்தத்துடன் பூமியதிர்ச்சி

இலங்கையில் கஹவத்த நகருக்கு அருகில் உள்ள கஹவத்துகந்த பகுதியில், பெரும் சத்தத்துடன் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.10 -08-2021.ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் இந்த சத்தம் கேட்டதாக கஹவத்த கிராம மக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொலிஸாருக்கும் பெல்மடுல்ல பிரதேச செயலகத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
கஹவத்த, நகரிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், ஓபநாயக்க பழைய ரயில் பாதைக்கு அருகில் வசிக்கும் மக்கள், பலத்த சத்தத்துடன் பூமி நடுங்குவது போல் இருந்ததாக கெரிவித்தனர்.மேலும், சில வீடுகளின் ஜன்னல்களும் அசைந்ததாக கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த சத்தம் இரண்டு மைல் தொலைவில் கேட்டது எனவும் கிராமவாசிகள்
 தெரிவிக்கின்றனர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக