siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

ஹாலி​எல போகொட வீட்டில் பேயோட்ட வந்த மந்திரவாதியின் இழிவான செயல்

வீட்டில் பேயோட்ட வந்த மந்திரவாதி இளம் யுவதி உட்பட இரண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் ஹாலி​எல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே 
இடம்பெற்றுள்ளது
45 வயதான பெண்ணும் 19 வயதான யுவதியுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.​​பேயோட்டுவதற்காக வந்திருந்த மந்திரவாதி , வீட்டிலிருந்த அனைத்து ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பிவைத்துள்ளதார். தான் அழைக்கும் வரையிலும் வீட்டுக்கு திரும்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறே, ஆண்களும் முச்சந்திக்கு சென்றுவிட்டனர். அதன்பின்னர், பேயோட்டுவதாகக் கூறி, பெண்ணையும் யுவதியையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், மெதிரிகிரியவைச் சேர்ந்த 41 வயதானவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை, நீதவான் முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக