யாழ் பருத்தித்துறை சுப்பர் மட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கரவெட்டி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்த வைரவ நாகரத்தினம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சுப்பர் மட பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த சடலத்தை அடையாளம் காணும் முயற்சியில் விசாரணைகளை முன்னெடுத்த போது , குறித்த நபர் நெல்லியடி இராஜ கிராமம் பகுதியை சேர்ந்தவர் என அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நபர் 16-08-2021.
அன்றுய தினம் இரவு
அவ்விடத்திலிருந்து சத்தமாக பாடல்களை பாடிக்கொண்டு இருந்ததாகவும், காலையில் சடலமாக காணப்பட்டதாகவும் அயலவர்கள்
தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக