siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 ஆகஸ்ட், 2021

நாட்டில் சீனியின் விலை அதிகரித்ததால் தேநீர் மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

இலங்கையில் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் சீனி தட்டுப்பாடு ஏற்பட கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் சீனியின் விலையை குறைக்க முடியாதென சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் 
தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, ஒரு கிலோ சீனியின் விலை 200 ரூபாவை கடந்துள்ள நிலையில், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் 
தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, எதிர்வரும் நாட்களில் சீனியின் விலை மேலும் உயரக்கூடும் எனவும், இதனால் கேக் ஒரு கிலோவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனி, பால்மா, முட்டை, உருளை கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளமை, தற்போது பாரிய பிரச்சினைகளை தோற்று வித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக