தனமல்வில பகுதியில் உணரப்பட்ட நில அதிர்வானது, குறித்த பகுதியின் நிலத்தில் ஏற்பட்டதல்ல என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.இதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என
அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்நில அதிர்வானது இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலையில், நாட்டில் உணரப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இவ்வாறான நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நில அதிர்வு உணரப்பட்டதால், இலங்கைக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளுடன் தொடர்புப்படுத்தி ஆராயப்பட்டது.இந்திய மற்றும் அவுஸ்திரேலிய கடற்பகுதிகளில் அந்த சந்தர்ப்பத்தில் பல நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் ஒன்றே இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான நில அதிர்வுகள் அரிதாகவே உணரப்படும் என பேராதனை பல்கலைகழகத்தின் புவியியல் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக