siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 29 நவம்பர், 2021

கந்தரோடைப் பிரதேசத்தில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு

யாழ்.சுன்னாகம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கந்தரோடைப் பிரதேசத்திலும் 28-11- 2021அன்று சமையல் எரிவாயு அடுப்பு  ஒன்று வெடிப்புக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளது.கந்தரோடை,  பிள்ளையாா் கோவில் வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.தேநீர் அருந்துவதற்காக நீரைச் சூடாக்குவதற்கு அடுப்பை இயக்கிவிட்டு வீட்டின் உரிமையாளர் இன்னுமொரு அறைக்குச் சென்ற சந்தர்ப்பத்திலே சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.சமையலறையில்...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் சுவிட்சர்லாந்தில் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் மரணம்

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.மேலும் உயிரிழந்த பெண் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>...

ஞாயிறு, 28 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரன் விமலாதேவி 28.11.21

தோற்றம்-26 09 1958-மறைவு-28 11 2021.யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், கல்வயல் 1ஆம் குறுக்குத் தெருவை வதிவிடமாகவும், புத்தூர் கிழக்கு மட்டுவில் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் விமலாதேவி அவர்கள் 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா, அன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற பசுபதி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின்...

சனி, 27 நவம்பர், 2021

யாழ் வடமராட்சி கடற்கரையில் பகுதியில் இரு சடலங்கள் மீட்ப்பு

யாழ்  வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் .27-11-2021§.இன்று குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன.இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில்,அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>...

வியாழன், 25 நவம்பர், 2021

ஆங்கிலக் கால்வாயில் பிரித்தானியா செல்ல முயன்ற 31 அகதிகள் மூழ்கினர்

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது  இறப்பர் டிங்கி கவிழ்ந்ததையடுத்து, சிறுமியொருவர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 31 பேர் 24-11-2021.அன்று இறந்துள்ளனர் இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>...

புதன், 24 நவம்பர், 2021

பல்கேரியாவில் பேருந்து ஒன்று தீ விபத்துக்களாகி 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் பலி

பல்கேரியாவின் மேற்கு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று தீ விபத்துக்களாகியதில் 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பல்கேரிய தலைநகருக்குத் தென் மேற்கே அமைந்துள்ள பொஸ்னெக் கிராமத்திற்கருகில் இன்று இச்சம்பவம் பதிவாகியுள்ளது.பேருந்து தீப்பிடித்த வேளை அதிலிருந்து தப்பிக்கக் குதித்த ஏழு பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் நான்கு வயதுடைய இரட்டை சகோதரர்களும்...

செவ்வாய், 23 நவம்பர், 2021

பச்சிளம் குழந்தையை உயிருடன் யாழ்.மட்டுவில் பகுதியில்புதைக்க முயன்ற தாய்

யாழ்.மட்டுவில் பகுதியில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற குற்றச்சாட்டில் குழந்தையின் தாயான 18 வயதான பெண்ணும் அவருடைய தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதோடு உயிருடன் புதைக்கப்படவிருந்த குழந்தையை மீட்டெடுத்த அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,மட்டுவில் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம்...

திங்கள், 22 நவம்பர், 2021

நாட்டில் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில்...

ஞாயிறு, 21 நவம்பர், 2021

மாத்தறை வைத்தியசாலைக்குள் பிணம் தின்னும் உயிரினங்கள்

மாத்தறை பிரதான வைத்தியசாலையில் அமைந்துள்ள பிணவறைக்குள் நாக பாம்புகள், சாரை பாம்புகள், எலிகள், கரப்பான்கள், உடும்புகள் மற்றும் பாறை உடும்புகள் என்பன நுழைந்து பிணங்களை உண்பதாக தெரியவருகிறது.இதன் காரணமாக பிணவறையில் பணிப்புரியும் ஊழியர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.பிணவறையின் இரும்பு கதவு உடைந்து சேதமடைந்து இருப்பதே அதற்கு காரணம் என வைத்தியசாலையின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.அண்மைய தினங்களில் பிணவறையில்...

சனி, 20 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திரு சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் (விக்கி)19.11.21

பிறப்பு-24-03-1969-மறைவு -19-11-2021யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் (விக்கி)அவர்கள் 19-11-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், அருளானந்தம், காலஞ்சென்ற இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுகனி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,விஜிதன், விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கோமதி(சுவிஸ்), காலஞ்சென்ற...

இலங்கை தமிழ் குடும்பம் லண்டனில் தீ விபத்தில் நான்கு பேர் பலி!

பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் 18-11-2021.அன்றைய தினம் இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில்...

வியாழன், 18 நவம்பர், 2021

நாட்டில் .பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது மக்கள் எச்சரிக்கையாக இருங்கவும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (18) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.இடியுடன்...

செவ்வாய், 16 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி பரமேஸ்வரன் பவானி 16.11.21

மறைவு -16 11 2021யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும்,  வதிவிடமாகக் கொண்ட சுப்பர் சின்னத்துரையின் மகள்  திருமதி பரமேஸ்வரன் பவானி அவர்கள் 16 11 -2021 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தியுள்ளார்அன்னார் சுப்பர் சின்னத்துரை (நவற்கிரி எல்லாளன் சனசமூக நிலையத்திற்கு அருகாமை)  அவர்களின் அன்புமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  அன்னாரின்...

திங்கள், 15 நவம்பர், 2021

அமரர் மாதர் தம்பிராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி 15.11.22

யாழ்  அச்சுவேலி  விக்கினேஸ்வர  வீதியை சேர்ந்த    அமரர் மாதர் தம்பிராசா அவர்களின்  ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி (திதி .15.11.2021 திங்கடகிழமை அன்று  .எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே ஐந்தாம் ஆண்டு  நிறைவுஆறாத்துயரத்தில் மனதுஆலமரம் போல் பெரிய நிழல்தந்தீரே பாலைவனம் நடுவேபரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?நித்தம் உங்களை நினைக்கின்றோம்!நீங்கள் எம்மோடு இருப்பது போல்உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்நினைவுகள்...

ஞாயிறு, 14 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி 13.11.2021

தோற்றம்-13-06-1956-மறைவு -13.11-2021யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் வெஸ்ட்ரவ்ல்டையில் வாழ்ந்து வந்தவருமான திருமதி கந்தசாமி இராஜேஸ்வரி  அவர்கள் 13 11 2021 அன்று  மாலை இயற்கை எய்தியுள்ளார்அன்னார் காலம்சென்ற கயிலாயர் சுப்பிரமணியம், காலம்சென்ற பூபதி சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகளும்,காலம் சென்ற தம்பிப்பிள்ளை, காலம் சென்ற சின்ன தங்கம் ஆகியோரின் அன்பு மருமகளும்,கந்தசாமி ( யேர்மனி) அவர்களின் பாசமிகு மனைவியும்,நித்யா,...

சனி, 13 நவம்பர், 2021

மரண அறிவித்தல் திரு பொன்னுத்துரை செல்வராஜா 12.11.21

தோற்றம்-15 02 1946-மறைவு-12 11 2021 யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், கொழும்பு, இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை செல்வராஜா அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் இறைபாதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தாதேவி அவர்களின் ஆருயிர்க்...

மரண அறிவித்தல் திருமதி சண்முகநாதன் ஜெயமலர் (வவா) 12 .11.21

தோற்றம்-12 03.1949-மறைவு-12 -11- 2021யாழ். மானிப்பாய் சங்குவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஜெயமலர் (வவா)  அவர்கள் 12-11-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சங்குவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், சுண்டுக்குழி பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்துரை புஸ்பராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ஜெறுசி(அபிவிருத்தி...

திங்கள், 8 நவம்பர், 2021

கொக்குவில் கேணியடிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயம்

கொக்குவில் –கேணியடிப் பகுதியில் 07-11-2021.நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிலில் வந்த மூவரே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை  மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது காயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் அங்கிருந்து...

ஞாயிறு, 7 நவம்பர், 2021

யாழ் கரவெட்டியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி

யாழ்., வடமராட்சி, கரவெட்டியில் சம்பவத்தில் துன்னாலை, ஆண்டாள் வளவைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது – 33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கரவெட்டி வடக்கிலுள்ள வீடொன்றில்06 -11-2021.அன்று  பிற்பகல் வீட்டு கூரை வேலையில் ஈடுபட்டிருந்த போது தகரம் ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அவர் உயிரிழந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் பொலிஸார்...

சீரற்ற காலநிலையால் நாட்டில் ஐவர் பலி இருவர் காயமடைந்துள்ளனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஐவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்தும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் 06 -11-2021.அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.இலங்கைக்கு அருகிலான பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மலையுடனான காலநிலை நிலவுகிறது நிலாவரை.கொம் செய்திகள் >>>...