siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஆகஸ்ட், 2022

அக்கரைப்பற்ரில் கணவருடன் சென்ற பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில்.31-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்திருந்தார்.பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்திருந்ததுடன் சம்பவ இடத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நாட்டில் கர்ப்பிணிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா வழங்கப்பட்டவுள்ளது.நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார்.இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டவுள்ளது.4 மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவத்தார்.அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல்...

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.இதன்காரணமாகவே  மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றமை அதிகரித்துள்ளதோடு தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர்...

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

நாட்டில் பெற்றோருடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த அவலம்

ஹசலக்க, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்.28-08-2022. இன்று  உயிரிழந்துள்ளார்.14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு இலக்கானார்.பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கங்கேயாய, பஹே-எல பகுதியைச் சேர்ந்த...

சனி, 27 ஆகஸ்ட், 2022

நாட்டில் கோழிக்கறி, மீன் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

நாட்டில் கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை சீமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின்...

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

அக்குரல பிரதேசத்தில் பாம்பு பிடிக்கும் நபர் பாம்பு தீண்டி மரணம்

பிடிக்கப்பட்ட நாக பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விடாது தோளில் போட்டுக்கொண்டு காட்சிப்படுத்திய பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று அம்பலாங்கொடை அக்குரல பிரதேசத்தில் நடந்துள்ளது.சம்பவத்தில் சுதத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அக்குரல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த நாக பாம்பை இந்த நபர் பிடித்துள்ளார்.பிடித்த பாம்பை தோளில் போட்டுக்கொண்டு...

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் பசியில் உள்ளவர்கள் வந்து உணவை உட்கொள்ளுங்கள் ஒரு ரூபாயேனும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக போராடி வருகின்றனர்.விண்ணை முட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.இவ்வாறான நெருக்கடியான நிலையில் பலர் உணவின்றி பசியால் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை நெகிழ...

புதன், 24 ஆகஸ்ட், 2022

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஆசிரியர் மரணம்

அதிவேக நெடுஞ்சாலையில்  23-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 47 வயதான கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.ஒரு பிள்ளையின் தாயான இவர் 16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  ...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

அமரர் இராசு பொன்மலர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி .23.08.22

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020  யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர்  இராசு பொன்மலர் அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவஞ்சலி .திதி- 23-08-2022.செவ்வாய்கிழமை.அன்று  . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கயனி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் அன்புத்...

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் 21,000 மெற்றிக் தொன் உரம் கையளிப்பு

21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 44,000 மெற்றிக் தொன் உரம் வழங்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரம் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.இந்த உரமானது உணவுப்...

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தெமடபிடிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பலி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தெமடபிடிய  20-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் உயிரிழந்துள்ள பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் நடந்த நேற்றிரவு பேலியகொட பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்று, வீதியின் குறுக்கே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்தில்...

சனி, 20 ஆகஸ்ட், 2022

கோர விபத்த்தில் திருகோணமலையில் மூவர் பலி

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்விபத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அத்துடன் 15பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

திடீரென அல்ஜீரியாவில் பரவிய காட்டுத் தீ - 37 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான‌ அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைப்பதற்கான...

மரண அறிவித்தல் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்19.08.2022

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன் )19-08-2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா) ...

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சர்வதேச சந்தையில் குறைவடையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக  1800 டொலர்களாக சரிந்து காணப்படுகின்றது.இதற்கமைய, தங்கம் விலையானது சற்று குறையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.சர்வதேச...

புதன், 17 ஆகஸ்ட், 2022

கோப்பாய் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு

யாழ் கோப்பாய் பகுதியை சேர்ந்த நபரொருவர் தனது நண்பனின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது 16-08-2022. அன்றைய தினம் நடைபெற்றுள்ளது.யாழ்ப்பாணம் – கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும்...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மூவர் வைத்தியசாலையில்

யாழ்.மண்டைதீவு பகுதியில்.16-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>...

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

கண்டி பிரதான வீதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதி நோக்கி நேற்று மாலை பயணிக்கும்...

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

உங்ககளுக்கு இல்லற தர்மம் எது என்பது தெரியுமா

கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது. கடைசி வரை கட்டிய மனைவியை கண் கலங்காமல் காப்பவன் ஒரு போதும் தவம் செய்ய தேவையில்லை.இருபத்தியொரு வயது வரை அவனவன் சொந்த ஆன்மா கர்ம செயலுக்கு வராது.அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும். 96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே.அதன் பிறகு தான் அவன் சொந்த கர்மா, கர்ம செயலில் இறங்கும்.சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது. சக்தியோடு துணை சேர வேண்டும்.தியான மூலம், பக்தி மூலம்,...

சனி, 13 ஆகஸ்ட், 2022

மரண அறிவித்தல்அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ( வெடிமான்)13 08 22

மறைவு-13 08 2022.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ( வெடிமான்) 13/08/2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2022.சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி ...

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )13.08.2

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 13-08-2022.சனிக்கிழமை  அன்று   அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின்  பாசமிகு மனைவியும்அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

மூளாய் , முன்கோடை பகுதியில் பசு மாட்டுக்கு இடம்பெற்ற கொடூர சம்பவம்

யாழ் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார்.அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக...