siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கியது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52 வது தேசிய
 தினத்தின் போது இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு 
ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க COP28 இல் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னணியிலும், இலங்கைக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின் பின்னணியிலும் இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இந்த நட்புறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் என அபுதாபியில் உள்ள
 இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச மன்னிப்பைப் பெற்ற இந்த 44 இலங்கையர்களும் உரிய நேரத்தில் ஐக்கிய அரபு அமீரக அரசால் இலங்கைக்குத் திருப்பி
 அனுப்பப்படுவார்கள்.
 அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அவர்களைப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதை 
உறுதிசெய்யும்.
அபுதாபியில் உள்ள இலங்கைத் தூதுவர் உதய இந்திரரத்னே, இந்த இலங்கையர்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததற்காக ஐக்கிய அரபு அமீரக அரசு மற்றும் அதன் வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவித்தார்
..என்பதும் குறிப்பிடத்தக்கது





 

சனி, 30 டிசம்பர், 2023

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்தார்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய்,இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில்
 உயிரிழந்துள்ளார்.
குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 




வெள்ளி, 29 டிசம்பர், 2023

அதிகரிக்கும் டெங்கு தொற்று:மன்னாரில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன் டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மன்னாரில் வைத்து இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

 நாடளாவிய ரீதியில் தற்போது டெங்கு நோயினுடைய தாக்கம் அதிகரித்துள்ளது. முழு இலங்கையும் எடுத்துக் கொண்டால் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் கடந்த ஜனவரி முதல் நவம்பர் வரை 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். அதேவேளை டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரையில் 88 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

 குறிப்பாக இந்த நோயாளர்களில் பலர் கொழும்பு கண்டி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து அல்லது அந்த பகுதிகளுக்கு சென்று வந்தவர்களாக காணப்படுகிறார்கள்.

 ஆகவே இவர்கள் இந்த டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு வரும்போது அவர்களை கடிக்கும் நுளம்புகள் தொற்றுதல் அடைந்து உள்ளூரிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக விடத்தல் தீவு மற்றும் மன்னார் நகரத்தின் சில பகுதிகளிலும் பேசாலை பகுதிகளிலும் அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 டெங்கு நோயைப் பொறுத்தவரையில் சாதாரண டெங்கு காய்ச்சல் ,குருதி பெருக்குடனான டெங்கு காய்ச்சல் என இருவகையான டெங்கு காய்ச்சல்கள் நிலைமைகள் உருவாகலாம். 
டெங்கு காய்ச்சலில் இந்த காய்ச்சல் ஒரு நோயாளருக்கு உருவாக போகிறது என்பது நோயாளியின் உடலில் உள்ள நீர்பீடன தன்மை அதே போல டெங்கு வைரஸ் பிற பொருட்கள் ஆன்டிஜன் எனப்படும் பிற பொருட்கள் மற்றும் ஏனைய நீர்பீட காரணிகள் தீர்மானிக்கின்றது.

 எது எவ்வாறாக இருக்கின்ற போதும் டெங்கு காய்ச்சலினுடையதும், குருதிப் பெருக்குடனான காய்ச்சலினுடையதும் ஆரம்ப அறிகுறிகளாக நெற்றி பொட்டை அண்டிய தலையடி, கண்ணின் பின்புறம் நோவு, சிலருக்கு தொண்டை நோவு,தசை நோவு சிலருக்கு வயிற்றில் நோவு போன்ற குணங்குறிகள் காணப்படும்.

 எவ்வாறு இருப்பினும் டெங்கு குருதி பெருக்குடனான காய்ச்சலாக மாற்றமடையும் சந்தர்ப்பத்தில் அவர்கள் அதிக கலப்படைந்தவர்களாக உடல் பகுதியில் குளிர்ந்தும் வலது பக்க வயிற்றின் மேல் பகுதி நோவுடனும் காணக்கூடியதாக இருக்கும்.

 இவர்கள் கசிவு என்ற நிலைக்கு உள்ளாகின்ற போது அபாயகரமான கட்டத்தை அடைகிறார்கள். இந்த கசிவு என்பது எமது குருதி நாடிகளில் இருந்து பிரிந்து செல்கின்ற குருதி மைத்துளை குழாய்களூடாக அதிகளமான நீர்பாயம் கலங்களுக்கும் குருதி மைத்துளைகளுக்கும் இடையில் வெளியேறுவதால் ஏற்படுகிறது .

 இந்த கசிவு நிலை ஏற்படுகின்ற போது உடலில் அதிர்ச்சி நிலை ஏற்படும். இந்த அதிர்ச்சி நிலைமை காரணமாக உடலினுடைய குருதி அமுக்கம் குறையும், மூளை இருதயம் போன்றவற்றுக்கு செல்கின்ற குருதியின் அளவு குறையும் இது சிலவேளை மரணத்தை ஏற்படுத்தும். 

 அதே நேரம் இவ்வாறு வெளியே செல்கின்ற நீர்பாயம் மீண்டும் உள் வருவதற்கான தன்மை காணப்படுகின்ற போது அந்த அலர்ஜி காரணமாக அதிகமாக வெளியேறிய குருதி மயிர்த்துளை குழாகளினுடைய துவாரங்கள் மூடுவதன் காரணமாக வெளியேறி திரவம் சில சந்தர்பங்களில் மீண்டும் உள்ளே வர முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படுகின்றபோது அவர்கள் இதயம் சுற்றும் மென்சவ் அலர்ஜி சுவாசப்பை அலர்ஜி மற்றும் மூளை வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைய கூடிய சாத்தியம் இருக்கின்றது. 

 ஆகவே இந்த டெங்கு குருதி பெருக்குடன் காய்ச்சல் நோயாளிகள் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். அவர்களுடைய குருதியின் சிறுதட்டுக்கள் எண்ணிக்கை குறைவடையும். ஆனால் குருதி சிறு தட்டுக்கள் உடைய எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் விட குறைவடைவதற்கு முன்பதாக சிலருக்கு கசிவு நிலை ஏற்படலாம்.

 ஆகவே சில குணங்குறிவுகளை அடிப்படையாகக் கொண்டு உடலில் அதிகளவு களைப்பு, வயிற்றில் நோவு, தொடர்ந்து சத்தி, இப்படியான குணங்குறிகள் இருப்பின் அவர்கள் கட்டாயம் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டும் . 

 அவர்களுக்கு வழங்கப்படும் திரவமானது அவர்களுடைய உடலுக்கு தேவையானது சரியானதும் அளவில் கொடுக்கப்பட வேண்டும். அதிகமாகவும் வழங்கக்கூடாது. குறைவாகவும் வழங்க கூடாது. அது வைத்தியசாலையில் தான் சரியான முறையில் அளவிட்டு தீர்மானிப்பார்கள் ஆகவே அவர்கள் வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது கட்டாயமாகும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது








 

வியாழன், 28 டிசம்பர், 2023

கப்டன் விஜயகாந் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார்

 கப்டன் விஜயகாந் நடிகரும் அரசியல்வாதியுமானவர்.28-12.2023. இன்றைய தினம் காலமானார்
 உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்திருந்தமை மக்கள் மனதில் பெரும் துன்பமாய் அமைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முக்கியமானவர் விஜயகாந்த். அவர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தனது பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். 1970களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகாந்த், அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்து, "
கேப்டன் பிரபாகரன்" திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து 
"கேப்டன்" என்ற பெயரைப் பெற்றார். அவர் தனது திரையில் பன்முகத்தன்மைக்காக அங்கீகரிக்கப்பட்டவர் மற்றும் அதிரடி, நாடகம் மற்றும் நகைச்சுவை வகைகளில் பரந்த அளவிலான கதாபாத்திரங்களை 
சித்தரித்துள்ளார்.
விஜயகாந்த் தனது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைத் தவிர, அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 2005 இல், அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) அரசியல் கட்சியை 
நிறுவினார் மற்றும் தமிழக அரசியல் நிலப்பரப்பில் 
தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் அவரை மாநிலத்தின் சமூக-அரசியல் அரங்கில் முக்கிய நபராக மாற்றியுள்ளது.
திரையுலகம் மற்றும் அரசியல் ஆகிய இரண்டிற்கும் விஜயகாந்த் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு பல தரப்பிலிருந்து 
அர்ப்பணிப்புள்ள ரசிகர் பட்டாளத்தையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது. அவர் ஒரு செல்வாக்கு மிக்க நபராகத் தொடர்கிறார், அவருடைய தனித்துவமான பாணி மற்றும் திரைக்கு உள்ளேயும் வெளியேயும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்
 அத்தோடு இலங்கையின் முக்கிய செய்திகளாக தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு அரசியல் அறிவு உள்ள நபர் ஒருவரே பொருத்தமான ஒன்றாக அமையும் என  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தெரிவித்திருந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 27 டிசம்பர், 2023

மயங்கி விழுந்த நிலையில் பண்டாரவளையில் தாதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 
விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது 
வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச்
 செல்லத் தயாரான நிலையில், 
திடீரென மயங்கி
 விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 
இருப்பினும் அவர் முன்னதாகவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரதுமரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனவும், உடல் உறுப்புகள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்பதும் குறிப்பிடத்தக்கது

செவ்வாய், 26 டிசம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பல்கலைகழக மாணவியின் மரணம் குறித்து சகோதரி தெரிவித்த தகவல்

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 
$அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து
 தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார். இந்நிலையில் குறித்த ஊசியை தாதியர் ஏற்றிவிட்டு போகும்போது மூச்சுத்திணறல், தலைவலி என்ற எனது தங்கை துடித்துள்ளார். 
இந்நிலையில் அந்த ஊசி மருந்துக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றினை கொடுத்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றனர்.
 அதன்பின்னர் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. பின்னர் மருத்துவர் 
வந்து “இதே ஊசி ஏனையோருக்கும் ஏற்றப்பட்டது. ஆனால் உங்களது தங்கச்சிக்கு தான் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. 
ஒவ்வாமை ஏதாவது இருக்கிறதா”
 என்று கேட்டார். 
ஆனால் ஏற்கனவே வைத்தியசாலையில் பதிவுகள் மேற்கொள்ளும் போது ஒவ்வாமை எதுவும் இல்லை என்று கூறினோம். பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக 
கூறினர். பின்னர் தெல்லிப்பழை வைத்தியசாலையின் எந்தவிதமான ஆவணங்களும் யாழ்ப்பாணம் போதனா 
வைத்தியசாலைக்கு அனுப்பப்படாமலேயே தங்கச்சியை அனுப்பி வைத்தனர். 
இதயத்தை தொழிற்பட வைப்பதற்காக கழுத்துக்கு
 கீழ் பகுதியில் இருந்து துளையிட்டார்கள். ஏனென்றால் இதயத்தின் தசைநார்கள் இறுகிவிட்டன. ஆகையால் உடல் பாகங்களுக்கு இரத்தம் செல்லவில்லை. முகம் வெளிறி, கால்கள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்தது. பின்னர் இரவு என்னையும் எனது அம்மாவையும் அழைத்த வைத்தியர், ஏற்கனவே ஏற்றப்பட்ட ஊசியின் தாக்கத்தினை தடுப்பதற்காக சிகிச்சைகள் வழங்கவுள்ளோம் என்றனர். 
இரவு எட்டு மணிக்குத்தான் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டது. எந்தவிதமான மருந்துகளும் வைத்தியசாலையில் இல்லாதது போல 
எல்லா மருந்துகளும் எங்களையே வாங்கி தருமாறு கூறினர். பின்னர் அடுத்தநாள் வைத்திய ஆலோசகருடன் பேசும்போது 90 வீதம் 
அபாய கட்டத்தில் இருந்து தற்போது 60 வீதம் நிலைமைகள் சீருக்கு வந்துள்ளது. ஆகையால் பயப்படத் தேவையில்லை 
என்று கூறினார். 
பின்னர் திடீரென செயற்கையாக இதயத்தை தொழிற்பட வைக்கும் மருந்தை குறைத்தனர். இவ்வாறு குறைத்ததால் மூன்று மணத்தியாலத்தில் திரும்பவும் அபாய கட்டத்திற்கு எனது தங்கச்சி சென்றார். இதன்போதே
 ஏதாவது எனது தங்கச்சிக்கு நடந்துவிட்டதா தெரியவில்லை. எனது தங்கச்சிக்கு ஏற்கனவே போட்ட ஊசி என்ன என நான் வைத்தியரை கேட்டவேளை அவர் என்ன ஊசி என்று கூறவில்லை. கண்ணுக்கு பிளாஸ்டர் போட்டு
 ஒட்டி இருந்தனர். 
பின்னர் இரவு எங்களை அழைத்தவேளை நாங்கள் போய் பார்த்தோம் வென்டிலேட்டர் குழாயில் இரத்தம் காணப்பட்டது. 
ஊசி ஏற்றுவதற்கு முன்னர் செவ்வாய்க்கிழமை பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் புதன்கிழமை பரிசோதனை செய்யவில்லை. ஏனென்றால் மெசின் பழுதாகி 
விட்டதாக கூறினர். 
இரத்த அளவீடு பார்க்காமல், குருதிச் சிறு தட்டுகளின் அளவு பார்க்காமல், டெங்கின் அளவுகள் பார்க்கால் எவ்வாறு ஊசியை ஏற்றினார்கள்? அத்துடன் ஏற்றப்பட்ட அந்த ஊசி தரக்குறைவான ஊசி என அழியமுடிகிறது.
 போடப்பட்ட ஊசியின் பெயரோ அல்லது அது தொடர்பான விபரங்கள் எவையும் பதிவுகளில் இடம்பெறவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது ஊசியின் தாக்கத்தினால் தான் எனது தங்கச்சி உயிரிழந்துள்ளதாக. எனவே 
இவ்வாறான இனி எந்த சம்பவங்களும் இனிமேல் நடக்கக்கூடாது. எனது தங்கச்சிக்கு நீதி வேண்டும் என்றார்.என்பதாகும்   


திங்கள், 25 டிசம்பர், 2023

கொரோனா அச்சம் வடக்கில் இல்லை டெங்கின் தாக்கம் அதிகரித்ப்பு சுகாதார பணிப்பாளர் தகவல்

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக 
கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 
 அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. 
ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன. 
 தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர். எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய 
தேவையில்லை. 
ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது





 

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பல்கலைக்கழக மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம் .

யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி
 காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  
இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி.23-12-2023. அன்றய  தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என காவல்துறையினர் 
தெரிவித்துள்ளனர்.  
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


சனி, 23 டிசம்பர், 2023

நிகழ்ந்த கார் விபத்தில் பிரான்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

பிரான்சில் 22-12-2023.வெள்ளிக்கிழமை அன்று  இரவு பிரான்ஸ் Yvelinesல்  மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர். Bailly எனும் நகருக்கு அருகே ஊடறுத்துச் செல்லும் 307 இலக்க சாலையில் இந்த விபத்து 22-12-2023ஆம் திகதி
 இடம்பெற்றது. 
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் Peugeot 206 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மகிழுந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மகிழுந்தைச் செலுத்திய 32 வயதுடைய ஒருவரும் அவரது சகோதரி (வயது 34) தாய் (வயது 62) தந்தை (வயது 71) ஆகிய
 நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்குள்ளான இரண்டாவது மகிழுந்தினை 34 வயதுடைய பெண் ஒருவர்
 செலுத்தியுள்ளார். 
அவரது மகிழுந்தில் இரண்டு மற்றும் மூன்று வயதுடைய குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் மாத்தளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளது.
 இதேவேளை, மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 இந்நிலையில், மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்லது விற்பனை வலையமைப்புகள் தொடர்பான சரியான தகவல்களை முன்வைப்பதற்கான குறிப்பிட்ட ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை என்றும் மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை 
தெரிவித்துள்ளது.
 அதன்படி, சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.  என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 டிசம்பர், 2023

கொழும்பு நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது

கணினி இணையத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இணையத்தைப் பயன்படுத்தி 'புஸ் புத்தா', 'புஸ் புத்தாவைப் பின்பற்றுபவர்கள்' என்ற பெயர்களில் உருவாக்கப்பட்ட சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் பௌத்தம் மற்றும் புத்தரை அவமதிக்கும் வகையிலான
 பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
. என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


புதன், 20 டிசம்பர், 2023

இலங்கை மக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம், வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பரவி வரும் வைரஸ்கள், கொவிட் வைரஸ் குழுக்களா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்படாததால் அதனை சரியாக கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இரத்தப் பரிசோதனை செய்து 
கொள்ள வேண்டும் எனவும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பாராசிட்டமோல் தவிர மற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக இந்நாட்களில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் 50 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதோடு 
அனைத்து அறைகளும் சுவாச நோயாளிகள் மற்றும் காய்ச்சலினால் நிரம்பி வழிகின்றன.
இதனால் பண்டிகை காலத்தில் சிறுவர்ளையும் குழந்தைகளையும் நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை முடிந்தவரை குறைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது  





 

செவ்வாய், 19 டிசம்பர், 2023

கிரிபத்கொடவில் அண்மையில் விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு பெண் உட்பட நால்வர் கைது

நாட்டில்  கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடைய ராகம மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி, ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5,200 மில்லிகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
கைத் துப்பாக்கி ரக துப்பாக்கியால் இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் காயப்படுத்தி குற்றம் செய்ய முயற்சித்தமை மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இவர்கள் வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது  








 

திங்கள், 18 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் இடைவிடாது தொடரும் மழையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அக்கரையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை 
குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 
 அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 
உள்ள மக்கள் 
பாதிக்கப்பட்டுள்ளனர். தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் முதலைகளின் அட்டகாசமும்
 அதிகரித்து 
கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரமந்னாறு பகுதியில்  17.12.2023.நேற்றைய தினம் இரவு முதலைக்கடிக்கு
 இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட மக்களுக்கான 
சமைத்த உணவு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு
 வருவதுடன், வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் தொடர்ச்சியாக கிராம சேவையாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 17 டிசம்பர், 2023

நாட்டில் கல்முனையில் இடம்பெற்ற சிறுவர்களின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

 கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களினால் மரணங்களை 
எதிர்கொண்டனர்.  
இதற்கமைய இவ்விரு மரணங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆராயப்பட்டுள்ளது.  
மேலும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ உட்பட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம கல்முனை 
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம் எல். புத்திக உட்பட மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு உயரதிகாரிகள் சம்பவ 
இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பல்வேறு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.  
மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இஸ்லாமபாத் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கல்முனை
 தலைமையக 
பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான
 எம்.எல். அஜித் ரோகண விசாரணை முன்னெடுப்பு தொடர்பில் விளக்கமளித்தார். 
அத்துடன் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவில் கல்வி கற்று வந்த மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை 
முன்னெடுத்து வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் 
பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான 
அதிகாரிகள் விசாரணை முன்னெடுப்பு தொடர்பாக 
விளக்கமளித்துள்ளனர்.
 இவ்விரு மாணவர்களின் விசாரணை முன்னெடுப்புக்களை கவனமெடுத்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண மேலதிக புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது  





 

சனி, 16 டிசம்பர், 2023

நாட்டில் விஜேராம மாவத்தையில் பெண் மரணம் பொலிஸார் விசாரணை

கொழும்பு, 07 விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்
 மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மித்ராணி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த பெண்ணின் சடலம் அவர் வசித்த வீட்டின் மாடியில் கிடந்ததாகவும் அவரது வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 இது கொலையா அல்லது சாதாரண மரணமா என்பது இன்னும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும் 






வெள்ளி, 15 டிசம்பர், 2023

முசாபர்கரில் குழந்தைகளை கொன்று சதையை உண்ட நபர் கைது

பஞ்சாபில் உள்ள முசாபர்கரில் குழந்தைகளை கொன்று அவர்களின் சதையை சாப்பிட்டதாக ஒருவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முசாபர்கரின் கான் கர் பகுதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்பு மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இருவரை 
கொடூரமாக கொன்று அவர்களின் இறைச்சியை சாப்பிட்டதாக 
கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த பொலிஸாரால் ஏழு வயது அலி ஹசன் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று வயது அப்துல்லா மற்றும் அவரது ஒன்றரை வயது சகோதரி ஹஃப்சா ஆகியோரை படுகொலை செய்த பின்னர், அந்த நபர் அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக அலி ஹசன் கூறினார்.
மேலும், முசாபர்காவில் உள்ள ஒரு உள்ளூர் தர்காவிலும் அந்த நபர் மனித சதையை விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டது. முசாபர்கர் போலீசார், அப்துல்லாவின் எச்சங்கள் மற்றும் கத்திகளை வயலில்
 இருந்து மீட்டனர், 
ஆனால் ஹஃப்சாவைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார், மேலும் அவர் சுயநினைவு திரும்பியவுடன் கொடூரமான கொலைகள் பற்றிய மேலும் வெளிப்பாடுகள் வெளியிடப்படும் என்று 
தெரிவித்துள்ளது.
 காணாமல் போன குழந்தைகளின் தந்தையின் முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கொலை மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.என்பதாகும் 





 

வியாழன், 14 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைத்த சுகாதார பிரிவினர்

உணவுக்குள் இலையான் இருந்த காரணத்தினால் கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றிக்கு சுகாதார பிரிவினர் 
சீல் வைத்துள்ளனர்.
 சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார பிரிவினர் சீல்வைத்து
 பூட்டிள்ளனர்.
 ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு  13-12-2023.அன்று 
 சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது.
 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே, பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 13 டிசம்பர், 2023

உடுவிலை சேர்ந்த இளம் பெண் திருமணம் முடித்து ஒருவருடதில் உயிரிழப்பு

யாழில் திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பப் பெண் ஒருவர்
.13-12-2023. இன்று  உயிரிழந்துள்ளார். 
உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசிந்தினி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு 
உயிரிழந்தார். குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த யுவதி கடந்த 11ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில்,  தெல்லிபாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக  12-12-2023.அன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது..13-12-2023. இன்று  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில்,  அவரது பிரேத பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
அத்துடன் மரணம் குறித்த விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.  குறித்த பெண்ணின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என்பதாகும்     


இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் உயிரிழப்பு

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ஹரியானாவை சேர்ந்தவர் 26 வயதான மயங்க் அகர்வால். இவர் டெல்லியில்
 மருத்துவராக பணியாற்றி வந்தார். மயங்க் 
அண்மையில் 
மெட்ரோ ரயிலில் பயணித்தார். பயணத்தின் போது அவர் ரயிலிலேயே சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மயங்கை தனியார்
 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் மாரடைப்பால்
 உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்கு முன்னதாக மயங்க் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
என்பதாகும்   






 

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கமுடியுமாம்

அடுத்த முறை மேற்கொள்ளப்படும் எரிவாயு விலைத்திருத்தத்தில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
அதாவது,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT 
திருத்தச் சட்டத்தின் காரணமாக எரிவாயு விலை உயரும்
 நிலை ஏற்பட்டுள்ளது. 
 எரிவாயுவுக்கு இதுவரை VAT வரி விதிக்கப்படவில்லை, ஆனால் நேற்று (11.12) முதல் எரிவாயு மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி, எரிவாயுவுக்கு அதிகபட்சமாக 18% விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 டிசம்பர், 2023

சுவிட்சர்லாந்தில் சியோனில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி ஒருவர் காயம்

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றாவது நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இத்தாலி மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்கு வெகு தொலைவில் உள்ள சுமார் 35,000 மக்கள் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

 அடையாளம் காணப்படாத ஆண் துப்பாக்கிதாரியை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிதாரி என நம்பப்படும் 36 வயதுடைய நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் மக்கள் முன்வந்து தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூர் வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளைதனிநபர் அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர்.   இதன்படி, 2.3 மில்லியன் துப்பாக்கிகள் பொது மக்களிடம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சுவிட்ஸர்லாந்தில் 2001 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 
உலகில் பல பாகங்களில் நடக்கும் போரும் மக்களின் வறுமையும், பலர் மன நோய்க்கு உள்ளாக்கப்பட்டதுமே இதன் காரணம் என பொது நலவாதிகள் குறிப்பிடுகிறார்கள். .என்பது குறிப்பிடத்தக்கது.


அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது