siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 மார்ச், 2023

ஈரானின் தீ மிதிப்பு திருவிழாவில் பலியான பல உயிர்கள்: ஆயிரக்கணக்கானோர் காயம்

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. ஃபார்சி மொழியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ மிதி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவானது மார்ச் மாதம் 20ம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20ம் திகதியில் இருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாக 
கூறப்படுகிறது.
இந்த தீ மிதி திருவிழாவானது ஈரானின் இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ஷியா பிரிவு மதகுருக்களால் பொதுவாக புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இருப்பினும் இளையோர்களிடத்தில் இந்த விழாவிற்கு பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக