மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச்
சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் வெள்ளத்தம்பி என்பவரே பலியானவராவார்.
நேற்று மாலை வழக்கம் போல் குறித்த ஆற்றுப்பகுதிக்கு இறால் பிடிப்பதற்கு தனது தோணியில் சென்றிருந்த போது திடீரென ஏற்பட்ட அதிகமான காற்றினால் குறித்த நபரின் தோணி நீரில் கவிழ்ந்துள்ளது.
இதையடுத்து குறித்த நபரினை மீட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக