மியான்மர் நாட்டில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின்
கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
விசாரணையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் மைல்போஸ்ட் 167க்கு அருகே பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயம் அடைந்தவர்களில் ஆபத்தான நிலையில் உள்ளவர்களும் அடங்குவர் என்றும், காயமடைந்தவர்களில் ஒரு குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக