இலங்கையில் மின்கட்டணம் மற்றும் எரிபொருளின் விலைகள் குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு என்ற ரீதியில் சில விடயங்களில் நாங்கள் பொறுமையாக செயற்பட வேண்டும். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் நாம் பெறும் சம்பளம் போதுமானதாக இருக்காது தான் .
ஆனால் தற்போதைய நிலைமையில் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைவடையும். எரிபொருள் விலையும் எதிர்வரும் நாட்களில் குறைவடையும்.
அடுத்ததாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் டொலரின் பெறுமதிக்கு ஏற்றால் போன்று இறக்கப்படும். இதன்போது விலை
குறைவடையும்.
இது மக்களுக்கு கிடைக்கும். அதேபோன்று எதிர்வரும் ஜுன் மாதமளவில் மின் கட்டணமும் குறைவடையும் என்று மின் சக்தி
அமைச்சர் கூறியுள்ளார்.
கிரீஸ்,ஆஜன்டீனா மற்றும் பாகிஸ்தான் நிலைக்கு இலங்கை செல்லவில்லை. தற்போது டொலர் பெறுமதி குறைவடைகின்றது.
பணவீக்கமும் குறைவடையும். பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அரசியல் செய்ய வேண்டிய தேவை எமக்கு கிடையாது,மாற்றுத்திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் தான் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்கு தவறான ஆலோசனை வழங்கி நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினர் தற்போது சுயாதீனம் என்று குறிப்பிட்டுக் கொண்டு எதிர்க்கட்சி பக்கம்
சென்றுள்ளார்கள்.
நாங்கள் அன்று அமைச்சு பதவிகளை வகிக்கவில்லை,நெருக்கடியான சூழ்நிலையில் தான் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றோம்,ஆட்சி,பதவி என்பது நிலையற்றது என்பதை குறிப்பிட்டுக்
கொள்கிறோம்.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்குவதாக குறிப்பிட்டுக்கொண்டு தொழிற்சங்கத்தினர் தற்போது தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்,2022ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி
பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் தாமதமடைந்தால் பெறுபேற்றை உரிய தினத்தில் வெளியிட
முடியாத நிலை ஏற்படும், இது எதிர்வரும்
காலங்களில்
இடம்பெறவுள்ள தேசிய பரீட்சைகளுக்கு தாக்கம் செலுத்தும் ஆகவே பேச்சுவார்த்தை ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என தொழிற்சங்கத்தினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக