siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 30 ஜூன், 2024

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானார்

துயர் பகிர்வு-மலர்வு -05-02-1933-உதிர்வு -30 06 2024.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பில் வசித்துவருபவரான திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ  இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் தனது 91வது கொழும்பில் சுகயீனம் காரணமாக காலமானார்.
அன்னார் தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் தேசிய கூட்டணியின் தலைவரும் ஆவார்.
பாராளுமன்றத்தின் வயது மூத்த உறுப்பினர் ஆவார்.
அவரை எல்லா வெளிநாட்டு தலைவர்கள் அவரது இல்லத்தில் வந்து சந்தித்து போவார்கள்.
தனது காலத்தில் அரசியல் தீர்வை பெற்று விடவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தவர் ஆனால் அது கை கூடவில்லை என்பது மிக 
கவலையாகும்.
இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா. சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை 
குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!




 

சனி, 29 ஜூன், 2024

கடலில் மிதந்து வந்த மர்ம போத்தலால் இலங்கையில் இருவர் உயிரிழப்பு

தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து 
உயிரிழந்துள்ளனர். 
மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த 
தெரிவித்தார். 
 தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட “டெவோன்” என்ற பல்நாள் மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது. 
 நேற்று (28) இரவு கடலில் மிதந்து வந்த போத்தல்கள் சில இவர்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை மதுபானம் என நினைத்து 
அருந்தியுள்ளனர். 
 இதன்போது, குறித்த 06 மீனவர்களும் சுகயீனமடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் செய்தி அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக அவர்கள் அறிவித்ததாகவும் கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 28 ஜூன், 2024

புதுடெல்லி விமான நிலைய கூரை:இடிந்து விழுந்து மூவர் உயிரிழப்பு


தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை (27) இரவு முழுவதும் பெய்த 
தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் டெல்லி
 நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து
 நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
மேலும், சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
 இந்த சூழலில் புதுடெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக 
மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி 
வைத்திருந்த கார்கள் பலத்த
 சேதமடைந்தன. உள்ளே சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு 
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். 
மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் புதுடெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதால் பலி
 எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் டெர்மினல் 1ல் இருந்து 
விமானப் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது


வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் நாய்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05 2024 அன்றைய
 தினம் நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை
 பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய 
தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக 26 05.2024 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக 
உயிரிழந்துள்ளார்.  
தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  
அப்பகுதியில் பல பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் அவர்களுக்கு மேலதிக சிகிச்சைகள் 
வழங்குவதற்காக
 நான்கு பேர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 
சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு
 அமைவாக அவர்களுக்கு முற்பாதுகாப்பு தடுப்பூசி 
ஏற்றப்பட்டுள்ளது.  
அத்துடன் அப்பகுதியில் கட்டாகாளி நாய்களும் அதிகரித்து காணப்படுவதை அவதானிக்க முடிவதுடன், அவைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு .வருகின்றனர் 
மேலும் இறந்த சிறுமியின் தாயார் வீட்டு வறுமைகாரணமக வெளியூர் சென்ற நிலையில் சிறுமியின் இறப்பு செய்திகேட்டு இன்று
 நாடுதிரும்பியுள்ளார்
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரோத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது



புதன், 26 ஜூன், 2024

கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து மாங்குளத்தில் விபத்து மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றின் பின்பகுதியில் பாரவூர்தி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
 இதன் போது பேருந்தில் வருகை தந்தவர்கள் இறங்கி பேருந்தின் பின்புறமாக நின்று கொண்டிருந்த போது அதே திசையில் 
வருகை தந்த 
பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும் பேருந்தின் மீதும் மோதியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர். பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவர் என இரண்டு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 என்பது குறிப்பிடத்தக்கது.




செவ்வாய், 25 ஜூன், 2024

கம்பளை சர்வதேச பாடசாலை மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு
  துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த கே.எம்.பி.ஆர்.ஜி. குலசேகர என்ற 18 வயது மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் 
கொண்டுள்ளார்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணிதப்பிரிவில் 
பயின்று வந்துள்ளார்.
இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியர் எனவும் 
தெரிவிக்கப்படுகிறது.
ஒரே சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், ஒரே சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.
தந்தை மறைத்து வைத்திந்த அவரது  துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன்,  துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
கம்பளை சர்வதேச பாடசாலையில் கல்வி பயின்ற இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ சித்தி மற்றும் B சித்தியுடன் சித்தியடைந்து உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 என்பது குறிப்பிடத்தக்கது  


திங்கள், 24 ஜூன், 2024

ரயில்வே கடவைப் பகுதியில் முருங்கன் விபத்தில் இளம் குடும்பத் தலைவர் பலி

மன்னார் - முருங்கன் ரயில் கடவை பகுதியில் நேற்று மாலை பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.மன்னாரில் இருந்து சென்ற தனியார் பேருந்தும், வவுனியா 
பகுதியில் இருந்து முருங்கன் வீதி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் முருங்கன்- கற்கிடந்தகுளம் கிராமத்திற்கும் இடையில் உள்ள ரயில்வே கடவைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சாளம்பன் நாக செட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தீபன் (வயது-35) இளம் குடும்பஸ்தர் என தெரிய வருகிறது.
சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது,




 

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் பேருந்து ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23-06-2024) காலை இந்த பயங்கர விபத்து
 இடம்பெற்றுள்ளது.
19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்தமை 
என்பது குறிப்பிடத்தக்கது 
உல்லாசப் பயணத்திற்காக இரத்தினபுரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தலாவ பொலிஸார் 
தெரிவித்தனர்.
விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 





 

சனி, 22 ஜூன், 2024

நாட்டில் காதலனை சந்தித்து விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

நாட்டில்  ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 இந்த குற்றத்தில் 5 இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி 
21-06-2024.வெள்ளிக்கிழமை.அன்று   தனது காதலனைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 
போதே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் மாணவியை பலாத்தகாரமாக ஏற்றிச்சென்று சுடுகாட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
 கொஸ்கம பகுதியைச் சேர்ந்த மாணவியொருவரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் ஏனைய இளைஞர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்
.என்பது குறிப்பிடத்தக்கது 




 

வெள்ளி, 21 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் செல்லையா கனகராசா 21.06.2024

துயர் பகிர்வு-மலர்வு -12-04-1949.-உதிர்வு - 21-06-2024
யாழ்.  ஆணைக்கோட் டை மூத்தநயினார் கோவில்  ஒழுங்கையைச் சேர்ந்த  அமரர் செல்லையா கனகராசா
  21-06-2024.வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் காலமானார் அன்னார் அமரர்களான செல்லையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் புதல்வனும் அமரர்களான கதிரவேலு   இராஜலஷ்மி   தம்பதிகளின் மருமகனும் 
ஜெயந்திராணியின் அன்புக்கணவரும்  மயூரனின் (Shakthi Fm ) பாசமிகு  தந்தையும்   மதங்கியின் மாமனும் 
கமலநாதன் செல்வராணி சற்குணதேவி  அகியோரின்  சகோதனும் சிவாஜினி மகாலிங்கம்  நாகேசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவர் 
 அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2024. ஞாயிற்க்கிழமை  அன்று காலை 10.00.மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம்பெறும்  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தொடர்புகளுக்கு  
தொலைபேசி இலக்கம் 
மகன் மயூரன் 
இலங்கை -077 3148435 
வீட்டுமுகவரி  
மூத்தநயினார் கோவில்  ஒழுங்கை
 ஆணைக்கோட் டை 
யாழ்ப்பானம்  
தகவல் குடும்பத்தினர் 


மரண அறிவித்தல் செல்லத்துரை கணேஷமூர்த்தி

துயர் பகிர்வு-மலர்வு -21-12-1945.-உதிர்வு - 19-06-2024
யாழ். அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஆவரங்கால்  பாடசாலையின் ஓய்வுநிலை ஆசிரியர் 
செல்லத்துரை கணேஷமூர்த்தி அவர்கள் 19-0-/2024 புதன்கிழமை அன்று   இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார் எமது பாடசாலையின் விவசாய விஞ்ஞான 
ஆசிரியராகவும் பகுதித் தலைவராகவும் சிறப்பான ஆசிரிய பணியை ஆற்றி இருந்தார். பாடசாலை மீதும் மாணவர்கள் மீதும் அதீத அன்பு கொண்டிருந்தார். 
சென்ற வருடத்திலும் பாடசாலை 
நிகழ்வில் கலந்து 
சிறப்பித்திருந்தார். அன்னாரின் இழப்பு பேரிழப்பாகும். 
அமைதியான சுவாவவும் மென்மையான பேச்சும் அனைவரையும் அணைக்கும் பண்பும் பிறருக்கு உதவும் நல்மனமும் அன்னார் மீது 
அனைவருக்கும் அதிக பிரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
அன்னார் பாடசாலைக்கு ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சித்தி விநாயகன் பாதங்களில் அமைதி கொள்ளட்டும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 



வியாழன், 20 ஜூன், 2024

காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு மரணதண்டனை

 வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 9 வருடங்களின் பின்னர், விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து
 நேற்று தீர்ப்பளித்துள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மானிப்பாய் காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில், அவருடைய 
கணவர் கைது 
செய்யப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது





 

மரண அறிவித்தல் பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )

துயர் பகிர்வு-உதிர்வு - 18-06-2024
யாழ். ஆவரங்கால் சங்கணாவத்தை வீதியை பிறப்பிடமாகவும்   தற்போது லண்டனை  வாழ்விடமாகவும் கொண்ட. 
அமரர். பொன்னுத்துரை முருகதாஸ் ( தாஸ் )
   அவர்கள் 18-06-2024. செவ்வாய்க்கிழமை.அன்று  இறைபாதம் அடைந்தார்.
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னார். காலஞ்சென்ற. 
திரு திருமதி. பொன்னுத்துரை பாலம்பிகை ( ஆசிரியை)  தம்பதியரின் அன்பு மகனும். 
திரு. திருமதி. யோகராஜா அன்னலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும். 
சுதா அவர்களின்  பாசமிகு கணவரும். 
நதீஷின் பாசமிகு தந்தையும். 
சாந்தி, ராசன் ( சண் சுவிஸ் ) சுகந்தி, ஜெயந்தா( சுவிஸ்) ஜெயா ( அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும். 
கரன்( அவுஸ்ரேலியா) சுதர்சினி  ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 
தொடர்புகட்க்கு. 
சுதா மனைவி
07737 197042
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

புதன், 19 ஜூன், 2024

துரித உணவகத்தில் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

டெல்லியில் Burger King துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் Burger King துரித உணவகம்
 ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த நபர் ஒருவரை குறைந்தது 15 முறை
 துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் வெளியே காத்திருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
குண்டு காயம்பட்ட படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொல்லப்பட்ட நபரின் பையில் இருந்து பேருந்து பயணச்சீட்டு, போன் சார்ஜரை மட்டும் கைப்பற்றினர். ஆனால் செல்போன், அடையாள அட்டைகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பலியானவரின் பெயர் அமன் என்றும், ஒரு கும்பல் போட்டியே கொலைக்கு வழிவகுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 18 ஜூன், 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா ஜெயநிதி

துயர் பகிர்வு
யாழ் அச்சுவேலி தெற்கு ஸ்ரீ விக்கினேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், பயிற்றோலை அச்சுவேலியை வசிப்பிடமாகவும், மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  கந்தையா ஜெயநிதி அவர்கள்  இறைவனடி சேர்ந்தார் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர் 

திங்கள், 17 ஜூன், 2024

படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்பு

 படகு உடைந்து நடுக்கடலில் மூழ்கியதில் மாயமான மற்றொரு தமிழக மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் - மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு நடுக்கடலில் படகின் அடிபகுதியில் 
உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் படகு மூழ்கியதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் இரண்டு மீனவர்கள் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
படகில் சென்று மாயமான கலீல் ரகுமான் என்ற மீனவரை தொடர்ந்து மரைன் போலீசார் தேடி வந்த நிலையில் உடைந்து. கடலுக்குள் மூழ்கிய படகின் உள்பகுதியில் கலீல் ரகுமான் உடல் சடலமாக
 கிடைத்துள்ளது.
கலீல் ரகுமான் உடலை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது



 

ஞாயிறு, 16 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீவிபத்து

நாட்டில் கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென தீப்பற்றிய மோட்டார் சைக்கிளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
எரிபொருள் நிரப்பு ஊழியர்கள் தீவிரமாக செயற்பட்டு ஆபத்தியிருந்து பாதுகாத்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் காத்தான்குடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணம் கொள்ளை

காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை இனம்தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். 
சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  
குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த தங்கப் பொருட்களையும் 20 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,ஆரியம்பதி கிழக்கைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டில் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிய வஸ்கடுவ கரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
பொலிஸ் அவசர அழைப்பு 119க்கு கிடைத்த தகவலுக்கு 
அமைய நேற்று (13) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
உயிரிழந்தவர் 05 அடி 02 அங்குல உயரம் கொண்ட மெலிந்த நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலைமுடி சுமார் 04 அங்குலமாக வளர்ந்துள்ளதாகவும், மேல் உடலில் பழுப்பு நிற சட்டை (T-shirt) அணிந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  
சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. என்பது குறிப்பிடத்தக்கது




 

வியாழன், 13 ஜூன், 2024

இந்தியர்கள் உள்பட குவைத் தீ விபத்து வெடிப்பிற்கான காரணம் கண்டுபிடிப்பு

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் இறந்துள்ளதுள்ளனர். 
இதன்மூலம், தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன. குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததாக யாராலும் தப்பிக்க 
முடியவில்லை.
அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. 
விபத்து நிகழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பு அடங்கிய அஹமதி மாநகராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது


 


புதன், 12 ஜூன், 2024

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனம் மோதி இரு இளைஞர்கள் படுகாயம்

யாழ் புன்னாலைக்கட்டுவனில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலாலி இராணுவ முகாமை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, இராணுவத்தினருக்கு சொந்தமான பௌசர் வாகனம் , புன்னாலைக்கட்டுவன் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி 
விபத்துக்குள்ளானது.
அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 11 ஜூன், 2024

ஆப்பிரிக்காவில் இருந்துவந்த அகதிகள் படகு ஏமனில் விபத்து பலர் உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது.
அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் 
தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் கொள்ளுப்பிட்டியில் பல வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து

கொள்ளுப்பிட்டியில் பேருந்து ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.  
அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 பேருந்தின் பிரேக் பழுதானதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் பஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.   என்பது குறிப்பிடத்தக்கது 







 

ஞாயிறு, 9 ஜூன், 2024

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஏழு நாட்களில் மொத்தம் 700 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது டெங்கு வெடிப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது.
 வழக்குகளின் அதிகரிப்புக்கு மழை நிலைமைகள் மற்றும் வெள்ள நீர் வடிந்து வருவதால் கொசுக்கள் பெருகும் இடங்களை 
உருவாக்குகிறது. 
ஜூன் 07 வரை, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 25,619 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 5,554 பேரும், மேல் மாகாணத்தில் 9,348 பேரும் பதிவாகியிருந்தனர். 
இது மாகாண வாரியாக அதிகபட்சமாக உள்ளது. இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கணிசமான 
மழை பெய்து 
வருவதால், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கவும் சுகாதார அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொள்கிறார்கள்
.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>