siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 10 செப்டம்பர், 2022

கடலில் படகு கவிழ்ந்து பிரேசில் விபத்து பரிதாபமாக 14 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் மராஜோ தீவில் பாரா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலிருந்து  பிலிம் நகரம் நோக்கி இன்று படகு சென்று கொண்டிருந்தது. 
இந்த படகில் 40 பேர் பயணித்தனர். கொடிஜுபா தீவு அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் மூழ்கியவர்களை மீட்கும்
 பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்த விபத்தில் கடலில் மூழ்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் மாயமாகியுள்ளனர். இதனை அடுத்து கடல் நீரில் மூழ்கி மாயமான 26 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 
வருகின்றது. 
இந்த விபத்துக்குள்ளான படகில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




மரண அறிவித்தல்அமரர் நவரத்தினம் கணேசலிங்கம் (கணேஸ் )10.09.22

மறைவு -10-09-2022-
யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் நவரத்தினம் கணேசலிங்கம் (கணேஸ் ) அவர்கள் 10-09-2022. சனிக்கிழமை  அன்று காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  11-09-2022, 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  வரை ஞாயிற்றுக்கிழமை .அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  
நல்லடக்கம்
11/09/2022  ஞாயிற்றுக்கிழமை  - பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 செப்டம்பர், 2022

சர்வதேச கால்பந்தாட்ட மைதானம் இலங்கையில்

¨¨இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் Sheik Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani  உடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக ஹரின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார்.
இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 8 செப்டம்பர், 2022

எலிசெபத்மகாராணி உடல்நலம் குறைவால் தனது 96வது வயதில் காலமானார்,08.09.22

 

இங்கிலாந்து மகாராணியான ராணி எலிசெபத் (96), அங்குள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வந்தார். 
இந்நிலையில், ராணி எலிசபெத்துக்கு இன்று திடீரென உடல்நலக் 
குறைவு ஏற்பட்டது. 
இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக் குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்தனர். 
ஆனால் சிகிச்சை பலனின்றி ராணி எலிசபெத் காலமானார். இங்கிலாந்து மகாராணி எலிசெபத் காலமானது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் 
தெரிவித்து வருகின்றனர்-

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மதா இணையம்.>>>




புதன், 7 செப்டம்பர், 2022

தம்பலகாமத்தில் தந்தையின் வானில் சிக்குண்ட சிறுவன் பலி

திருகோணமலை தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தையின் வானில் சிக்குண்ட சிறுவன் பலியான துயர சம்பவம் ஒன்று இன்று (07) இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தந்தை, திருமண வைபவத்துக்கு செல்வதற்காக வானை பின்னால் எடுத்த போது அதற்குள் சிக்குண்டு ஸ்தலத்தில் சிறுவனான மகள் பலியானதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தம்பலகாமம் நாயன்மார் திடலை சேர்ந்த ஆர்.நசிட்றா வயது (02) என காவல்துறையினர்
 தெரிவித்தனர்.
குறித்த வான் தம்பலகாமம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் கனடாவில் 10 பேர் சந்தேக நபர்கள் இருவர் கைது

கனடாவில் 10 பேர் கொல்லப்பட்ட கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் சந்தேக நபர்கள் இருவருக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சஸ்காட்சுவான் பொலிஸார் கூறியுள்ளனர்.
டேமியன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படுகின்றனர்.
ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன், சாஸ்கடூனின் வடகிழக்கில் 13 வெவ்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந்தன, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குள் முதல் சம்பவம் பற்றிய அறிக்கையை பொலிசார் பெற்றனர்.
டேமியன், 31 மற்றும் மைல்ஸ், 30 ஆகியோருக்கு ஆல்பர்ட்டாவிலிருந்து மனிடோபா வரை ஆபத்தான நபர்கள் என்ற எச்சரிக்கை
 நடைமுறையில் உள்ளது.
தேடப்படும் இருவர் மீதும் முதல் நிலை கொலை, மைல்ஸ் மீது மூன்று வழக்குகள் மற்றும் டேமியனுக்கு இன்று என குற்றம் 
சாட்டப்பட்டுள்ளது.
டேமியன் ஐந்தடி-ஏழு அங்குல உயரம் மற்றும் 155 பவுண்டுகள் என்றும், மைல்ஸ் சாண்டர்சன் ஆறு-அடி-ஒன்று மற்றும் 200 பவுண்டுகள் என்றும் விவரிக்கப்பட்டுள்ளனர்.
இருவருக்குமே கறுப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் உள்ளன.  அனுமதி இலக்க தகடு 119 MPI உடன் கருப்பு நிற நிசான் ரோக் காரை ஓட்டி இருக்கலாம், எனினும் அவர்கள் வாகனங்களை மாற்றி இருக்கலாம் என்று 
பொலிசார் கூறியுள்ளனர்.
சஸ்காட்செவன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்களுக்கு, இந்த சோகத்திற்கு காரணமான நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கும் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எங்களிடம் உள்ள
 ஒவ்வொரு மனிதனையும், விசாரணை மற்றும் தொழில்நுட்ப வளங்களையும் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சஸ்காட்செவன் பொலிஸ் கமாண்டர் ரோண்டா பிளாக்மோர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 5 செப்டம்பர், 2022

நாட்டில் வைத்தியசாலைகளில் மார்பக புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும்மருந்துகள் கிடைக்காததால், பெரும் சிரமம்

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும்  (Trastuzumab) தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம  வைத்தியசாலைகள் உட்பட பல வைத்தியசாலைகளில்  trastuzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள்
 தெரிவிக்கின்றன.
1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை 
அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

நாட்டில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம்

ஹல்துமுல்ல, உடவேரியவத்தை, சன்வெலி தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
குருத்தலாவ, வெலமிட்டிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் அருவியை பார்வையிட வந்துள்ளார்.
அங்கு புகைப்படம் எடுக்க முற்பட்ட போது அவர் அருவியில் தவறி விழுந்து அந்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள நீர்வீழ்ச்சியில் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இலங்கையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்

பாடசாலை ஆசியரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு வசதி பொதுநிர்வாக அமைச்சினால் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த கால எல்லை மீண்டும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை
 நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு இடையில் நேற்றைய தினம் கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது தற்காலிக இணைப்பு வசதி காலத்தை டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக 
7தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 1 செப்டம்பர், 2022

இலங்கையில் எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்படி, எரிபொருள்களின் விலை.01-09-2022. இன்று குறைக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர 
அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கம் முன்னர் 
அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை சூத்திரம் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டாலும், எரிபொருள் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ர்வதேச எரிபொருளின் விலை தற்போது குறைந்துள்ள போதிலும், இலங்கை ஏற்கனவே எரிபொருளை முன்னைய செலவினங்களின் கீழ் இறக்குமதி செய்துள்ளதால் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய இறக்குமதி செலவுகள் காரணமாக விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை சூத்திரம் நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் பொதுமக்கள் நன்மைகளையும் சலுகைகளையும் பெறுவார்கள் என நான் நம்புகின்றேன் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மகனின் தலையில் தந்தை பறித்த தேங்காய் விழுந்து மகன் மரணம்

தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்து மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுள காவல்துறையினர் தெரிவித்தனர்.
மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நமக்குள மியானகந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம்.சமீரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை.கடந்த 29ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தந்தை தோட்டத்திலுள்ள 50 அடி உயர மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது, ​​மகன் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவ்வேளையில் தேங்காய் பறிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 31.08-2022.அன்று  உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 31 ஆகஸ்ட், 2022

அக்கரைப்பற்ரில் கணவருடன் சென்ற பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில்.31-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவி 
உயிரிழந்திருந்தார்.
பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்திருந்ததுடன் சம்பவ இடத்தில் காயமடைந்த 
பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
 பெற்று வருகின்றார்.
விபத்தில் உயிரிழந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்பவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சடலமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரேத மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் கட்டளையிட்டார்.
மேலும் குறித்த விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு பின்னர் உறவினர்களிடம் 
கையளிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நாட்டில் கர்ப்பிணிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா
 வழங்கப்பட்டவுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு 
வழங்கப்பட்டவுள்ளது.
4 மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் 
மேலும் தெரிவத்தார்.
அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெறுமதிசேர் வரி (VAT) 12% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே  மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றமை அதிகரித்துள்ளதோடு தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 
அவர் தெரிவித்தார்.
மேலும் முத்துராஜவலை எரிபொருள் முனையத்தில் இருந்து டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதோடு பெற்றோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

நாட்டில் பெற்றோருடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த அவலம்

ஹசலக்க, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்.28-08-2022. இன்று 
 உயிரிழந்துள்ளார்.
14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு
 இலக்கானார்.
பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கங்கேயாய, பஹே-எல பகுதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் 
தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 27 ஆகஸ்ட், 2022

நாட்டில் கோழிக்கறி, மீன் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

நாட்டில் கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

அக்குரல பிரதேசத்தில் பாம்பு பிடிக்கும் நபர் பாம்பு தீண்டி மரணம்

பிடிக்கப்பட்ட நாக பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விடாது தோளில் போட்டுக்கொண்டு காட்சிப்படுத்திய பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அம்பலாங்கொடை அக்குரல பிரதேசத்தில் நடந்துள்ளது.சம்பவத்தில் சுதத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
அக்குரல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த நாக பாம்பை 
இந்த நபர் பிடித்துள்ளார்.
பிடித்த பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பாம்பின் இருமுனைகளிலும் பிடித்து அங்கும், இங்கும் இழுத்த போதே அந்த பாம்பு தீண்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு தீண்டிய நபர் முதலில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
பாம்பு தீண்டி மரணமடைந்த இந்த நபர் இதற்கு முன்னர் பல பாம்புகளை பிடித்து காட்டில் விட்டுள்ளதாகவும் பிரதேச 
மக்கள் கூறியுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் பசியில் உள்ளவர்கள் வந்து உணவை உட்கொள்ளுங்கள் ஒரு ரூபாயேனும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக
 போராடி வருகின்றனர்.
விண்ணை முட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் 
அதிகரித்துள்ளன.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் பலர் உணவின்றி பசியால் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை
 நெகிழ வைத்துள்ளார்.
தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும்.
அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை ஒன்றையும் அவர் மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
அதில், “இல்லாதவர்கள் பசியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து உட்கொள்ளுங்கள்.. ஒரு ரூபாயேனும் 
எங்களுக்கு வேண்டாம்.
உண்மையாகவே அவசியம் உள்ளவர்கள் மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து உணவுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கு உட்கொள்ளும் உணவிற்கும் பணம் அறவிடப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான விலைவாசி உள்ள போதும் இவ்வாறான மனிதநேயத்துடன் சிலர் செயற்படுவது, பசியால் வாடுவோருக்கு தெய்வமாக தென்படுவதாக பயன்பெற்ற பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





புதன், 24 ஆகஸ்ட், 2022

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஆசிரியர் மரணம்

அதிவேக நெடுஞ்சாலையில்  23-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 47 வயதான கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இவர் 16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் 
தெரிவிக்கப்படுகிறது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

அமரர் இராசு பொன்மலர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி .23.08.22

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020  
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  இராசு பொன்மலர் 
அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவஞ்சலி .
திதி- 23-08-2022.செவ்வாய்கிழமை.அன்று 
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கயனி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் 
அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா  (ஆசிரியை ) சசிகலா துவாரகா
 (கோப்பாய் ஆசிரிய கலாசாலை  )சற்குணரா  
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும் 
திரு தேய்வேந்திரம்   மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின்  அன்புச்சகோதரியும் 
  ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா   அபிஷ்னா கபீஷன்   சங்கீத்  சபீஸ்ணா  ஹரிஷ்வின் யதிஸ்னா 
  பவிஷனன் நைனிஹா  ஆகியரின்   பேத்தியும்  ஆவர்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில் ஓராண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,கணவர்  பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் 21,000 மெற்றிக் தொன் உரம் கையளிப்பு

21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 44,000 மெற்றிக் தொன் உரம் வழங்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரம் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரமானது உணவுப் பாதுகாப்புக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும் பங்களிக்கும் என்று அந்த செய்தியில் 
சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் இந்தியாவுடனான நெருக்கமான உறவுகள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை வெளிப்படுத்துகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விவசாயம் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தெமடபிடிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பலி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தெமடபிடிய  20-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்துள்ள பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என 
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேற்றிரவு பேலியகொட பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்று, வீதியின் குறுக்கே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என 
பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் 
வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொட்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

சனி, 20 ஆகஸ்ட், 2022

கோர விபத்த்தில் திருகோணமலையில் மூவர் பலி

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>