siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.மானிப்பாயிலுள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில் யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம் சிவலோகம்(வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திகிலிவெட்டையில் பெண்ணின் சடலத்தை பார்த்து போலீஸ் அதிகாரி மரணம்

மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை பகுதியில் இடம் பெற்ற இரண்டு துயரச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு, குறித்த சம்பவத்தின் விசாரணைப் பதிவுக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த உயிரிழந்த பெண் சடலத்தை திறந்து பார்த்தவுடன் ஒரு வித நடுக்கம் ஏற்றபட்ட பின்னர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் 
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முக்கிய விடயம் , அதாவது இறந்தவரின் கணவனார் மயக்கமற்ற நிலையில் தூக்கிவந்தவேளை பொலிசாரையும் தூக்கி சுமந்த பொதுமக்கள், ஒரு முச்சக்கர வண்டியில் 
உயிரிழந்தவரின் கணவர் உட்பட அவர் உறவுகள் ஏறாவூர் பொலிசுக்கு முறைப்பட்டுக்கு சென்றவேளை பொலிசார் கவலைக்கிடமான நிலையில்
 இருந்ததை அவதானித்த ஒருவர் முச்சக்கர வண்டியில் இருந்தவர்களிடம் காரசாரமாக பேசிய பின்னர் அவர்களை 
இறக்கி கவலைக்கிடமான பொலிசாரை ஏற்றி அனுப்பியிருந்தார், மறுகணமே சற்று மணித்துளிகள் கடந்த நிலையில் அந்த பொலிசாரும் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதுதான் மனிதனின் இன்றைய வாழ்க்கைளிக் யதார்த்தம் என குறிப்பிடும்
 பிரதேச வாசிகள்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

சாவகச்சேரியில் தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்

தலை கவசம் அணியாமல் பாடசாலை மாணவா்களை மோட்டாா் சைக்கிள்களில் கொண்டு சென்றவா்களுக்கு எதிராக 1100 ரூபாய் சம்பவ இடத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளியில் ஏற்றி வந்த 25க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பவ 
இடத் தண்டம் அறவிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை என்பதால் வழமை போல் மாணவ ர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் பாடசாலைக்கு அழைத்து வந்தபோது பொலிஸாரால் இவர்கள் பிடிக்கப்பட்டனர். சாவகச்சேரி நகரில் உள்ள முன்னணிப் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிவரும் போது தலைக்கவசம் அணியவதில்லை
யென முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் திடீர் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக வங்கிகளில் பேணி வந்தால் கட்டணம் அறவீடு

வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்தளவில் மீதியை பேணும் வங்கிக் கணக்குகளை நடாத்திச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமையே இதற்கான காரணம் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.இடைநடுவில் பணம் வைப்புச் செய்தால் வழமை போன்று கணக்கு பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 9 பிப்ரவரி, 2019

அமரர் துரைராஜா இரத்தினம் 3ம் ஆண்டு நினைவஞ்சலி 10.02.19

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016
      திதி-- 10-02.2019
நீங்காத நினைவு. மூன்றாம் ஆண்டு 10-02.2019
 அமரர்  துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர்  துரைராஜா இரத்தினம் அவர்களின்
 நீங்காத நினைவுட  மூன்றாம்  ஆண்டு நினைவஞ்சலி 10.02.2019.ஞாயிருக்கிழமை  
.இன்று திதி  ..
 அன்பும் பணிவும் பாசமும் அறிவும் அழகும் துணிவும் மிக்க கணவராகவும், பாசமும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பாசமிகு தந்தையாகவும், அப்பா என்ற கடமையில் எந்த குறையின்றி 
சரியாக நடத்தி வாழ்ந்தீர்கள். அப்பா உங்கள் அன்பான சிரிப்பும் அன்பான பாசம் தன் பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்ககூடாது என்று எங்களை கவனமாக வளர்த்தீர்கள் நீங்கள் எங்களுக்காக
$ செய்த தியாகம் எவ்வளவு அப்பா என்று கூப்பிட
 எனக்கு அப்பா இல்லாமல் போய்வீட்டீர்கள். உங்களின் திடீர் பிரிவு எதற்கு ஈடு கொடுக்க முடியாது அம்மாவையும் எங்களையும்  ஏங்கி தவிக்கவிட்டு சென்றீர்களே என்றும் இதயத்தில் வாழ்ந்து
 கொண்டுயிருப்பீர்கள். உங்கள் பிரிவால் ஏங்கி தவிக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரிகள், மருமக்கள்மார்.மைத்துணர்கள் பேரப்பிள்ளைகள்  உங்கள் ஆத்மா சாந்தியடைந்து சொர்க்கவாசல் செல்ல வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்^
 அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் -குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஊரிக்காட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இளைஞன் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதான குறிப்பிடப்படுகின்றது.
இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார். 
ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 
இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 
குறித்த சடலத்தில் சில இடங்களில் எரிகாயம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நுணாவில் 13 வயதுச் சிறுவனை தீண்டிய பாம்பு

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுவனை, வரம்புப் புல்லுக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வயலில் நெல் அறுவடை செய்வதைப் பார்த்துக் கொண்டு வரம்பில் நின்ற சிறுவனே இந்த சம்பவத்திற்கு முகம் 
கொடுத்துள்ளார்.
பாம்பினால் கடியுண்ட சிறுவன், சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 6 பிப்ரவரி, 2019

பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் கடமை நேரத்தில் பாவிக்கத்தடை

கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.
தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன
 தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு
 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை 
நடத்துகின்றோம்.
இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்று தான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை .ஆனால் சம்பளம் கிடைக்கும்.
அரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போதே காலை 9.30 ஆகி விடுகிறது. அதன்பின்னர் மெதுவாக தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத் தான், 9.30 க்கு தத்தமது வேலைகளை அரச பணியாளர்கள் 
ஆரம்பிக்கின்றனர்.
வேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து ‘டொக் டொக்’ என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து ‘மேசேஜ்’ அனுப்பத் தொடங்குவர். பிறகு ‘ஃபேஸ்புக்’ பார்க்கத்
 தொடங்குவர்.
அரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா? என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன், இரு மணிநேரம் கூட 
அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும் வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே ‘ஐஸ்’ அடித்துவிட்டுச் செல்கின்றனர்.
எனவே, யாராவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத் தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று 
விசாரணை நடத்துவேன்.
இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும், என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.


செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரண அறிவித்தல்,அமரர் .தம்பு சந்திரசேகரராஜா 04-02.19

அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா  அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389   பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894  கைத்தோலை பேசி : +94766092827   சின்னராசா(அப்பன்) 
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 பிப்ரவரி, 2019

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போ‍தே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி 
அவர் உயிரிழந்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காதலியுடன் கும்மாளம் போட்ட காதலுனுக்கு நேர்ந்த கதி

மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்.(02) நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி உத்தரவிட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வரும் மகளின் சமவயது மாணவன் கடந்த 1 ஆம் திகதி வீட்டிற்கு வந்துள்ளார்.வெளியில் சென்றிருந்த பெண் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வீட்டில் இருந்த மாணவனுக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளதுடன் பெண், மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கியுள்ளார்
.சம்பவத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோடி பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளார்.மொரஹெல, பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த மாணவனின் காதையே பெண் கடித்துள்ளார். துண்டான காது பகுதியுடன் பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு 
செய்துள்ளார்.
உடனடியாக காது பகுதியை பொலிஸார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அதனை பொருத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.சந்தேகநபரான பெண்ணின் மகளும், காயமடைந்த இளைஞனும் பலாங்கொடை நகரில் பாடசாலை ஒன்றில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றனர்.
எவ்வாறாயினும், உடைந்து போன செல்போனை திருத்திக்கொடுப்பதற்காக மாணவன் வீட்டிற்கு வந்திருந்ததாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காவலர்களை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அதிகாரி யாழில் மரணம்

யாழ் செய்திகள்:யாழ்ப்பாண சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை
 இயற்கை எய்தியுள்ளார்.
கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பருத்தித்துறையை சேர்ந்தவராவர். 1937ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25வயதில் 1962ஆம் ஆண்டு காவல்துறை சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து 
கொண்டுள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம்! அச்சத்தில் ஊர் மக்கள்

யாழ் செய்திகள்:அச்சுவேலி – பத்திரகாளி ஆலயத்தில் கொடியேற்றத்தை தடுத்தார் தர்மகத்தா -ஊர் மக்கள் கவலை, தீமை நடக்கலாம் என அச்சம்-
அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச் செய்யவிடாமல் வேறு ஒருவரைத் தான் ஏற்பாடு செய்வார் என ஆலய தர்மகத்தா கூறினார் எனவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்தே கொடியேற்ற விடாமல் தர்மகத்தா தடுத்துள்ளார் என பிரதேச மக்கள் 
தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இவ்வருடம் புதிய சித்திரத் தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், கொடியேற்றம் இடம்பெறாமையால் தேர் வெள்ளோட்டம் எப்படி நடைபெறும் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆலய அர்ச்சகர் உட்பட பிரதேச மக்கள் பலரும் தர்மகத்தாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் இம்மியும் இளகவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனால், நேற்றைய கொடியேற்றத்திற்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்ட கும்பங்கள் அனைத்தும் நேற்றுக் காலை கலைக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் நித்திய பூசை மட்டும் இடம்பெற்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் வரணியில் ஜே.சி.பி வாகத்தால் தேர் இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், நேற்று ஒரு ஆலயத்தில் கொடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




சனி, 2 பிப்ரவரி, 2019

.கந்தரோடையில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

யாழ்.சுன்னாகம் கந்தரோடையில் 20 வயது இளைஞனொருவர் சனிக்கிழமை(02) காலை வீட்டின் பூஜை அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
சுன்னாகம் கந்தரோடை கந்தசாமி வீதியைச்
 சேர்ந்த நாதன் ஜசிந்தன் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த இளைஞர் வழமை போன்று நேற்றிரவு(01) பூஜை அறையில் உறக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை இளைஞனின் தாயார் பூஜை அறைக் கதவைத் திறந்து பார்த்த 
போது, தனது மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இளைஞன் படித்து முடித்து விட்டுக் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இதேவேளை,சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், ஒரு வித மனவிரக்தியே தற்கொலைக்கான காரணமாகவிருக்கலாமென சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது.



வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

கோர விபத்துயாழில் ரயிலுடன் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் 
அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொழும்பிலிருந்து
 யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் மோதுண்ட இளைஞனே விபத்தில் சிக்கியுள்ளார். ரயிலில் மோதுண்டவர் சற்றுத் தூரம் வரை வீசி ஏறியப்பட்டார் என நேரில் பார்த்தவர்கள்
 தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் விபத்து நடந்துள்ளது.விபத்தில் சிக்கிய இளைஞன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தூக்கி் வீசப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 30 ஜனவரி, 2019

யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 சாவகச்சேரி பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
 இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.00 மணியளவில் நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது.
 சிறீதரன் கோகிலமதி (வயது 22) என்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2 ஆம் வருட மாணவியே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
 பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
 இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </




கொடிகாமத்தில் காணி சண்டையில்ö முதியவர் அடித்து கொலை

யாழ்ப்பாணணத்தில் காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இச்சம்பவம்$
 இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் கொடிகாமம் வடக்கு எழுதுமட்டுவாளை சேர்ந்த 78 வயதான செல்லன் சின்னத்துரை என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும்
 தெரியவருவதாவது,
குறித்த முதியவருக்கும் , மட்டுவில் பகுதியை சேர்ந்த வேறு இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக காணி பிணக்கு நடை
பெற்று வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி இரு தரப்பினருக்கும் இடையில் காணிப்பிணக்கு ஏற்பட்டதில் வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியுள்ளது.
இதன்போது இருவரும் இணைந்து முதியவரை பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.
அத்தாக்குதலில் படுகாயமடைந்த முதியவரை அயலவர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முதியவர் 
மாற்றப்பட்டார்.
இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென
 உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முதியவரின் உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </




போலியான தண்ணீர்ப் போத்தல் விற்பனை யாழ் குடாநாட்டில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான தண்ணீர்ப் போத்தல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு விற்பனை செய்து வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் குறித்த
 போத்தல்கள சிக்கின.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்றில், நிறுவனத்தின் பதிவு இலக்கம் இன்றித் தயார் செய்யப்பட்ட, போலி இலக்கம் ஒட்டப்பட்டிருந்த குடி தண்ணீர்ப் போத்தல்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்வாறு விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 6 ஆயிரத்து 800 குடி தண்ணீர்ப் போத்தல்களை சுகாதார உத்தியோகத்தர்கள்
 கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போத்தல்கள் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
போத்தலில் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதிப் பதிவு இலக்கம் என தனியான ஓர் சிறிய ஸ்ரிக்கர் அச்சிடப்பட்டு ஓட்டியுள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர் மன்றின் கவனத்துக்குக் 
கொண்டு வந்திருந்தார்.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி, குறித்த வழக்கில் மாவட்ட விநியோகஸ்தரோடு பிரதான சந்தேக நபருக்கு அழைப்பானை அனுப்புமாறும், அதுவரை சான்றுப் பொருட்கனை மன்றில் தடுத்து வைத்ததோடு, மாவட்ட விநியோகஸ்தரான 2 ஆம் எதிரியை 40 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில்
 செல்ல அனுமதித்தார்.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கில் பிரதான சந்தேக நபர்களும் மன்றில் தோன்றிய நிலையில் யாழ்ப்பாணம் மேலதி நீதிமன்றில் குறித்த வழக்கு இடம்பெற்றது.
இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதிவான், குடி தண்ணீர்ப் போத்தல்கள் அனைத்தையும் அழிக்குமாறும், பிரதான சந்தேக நபர்கள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா குற்றப்பணம் செலுத்த வேண்டும்.
 எனவும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இவ்வாறான போத்தல் நீர் பருகும் யாழ்ப்பாண மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பூப்புனித நீராட்டு விழாவிற்கு யாழிலிருந்து சென்ற குடும்பம் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை செட்டியார் தெரு வீதியிலிருந்து மட்டக்களப்பு செங்கலடி எல்லை வீதியிலுள்ள தமது உறவினர் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு குறித்த குடும்பத்தினர் காரில் புறப்பட்டுள்ளனர்.
அதன்போது வாகனத்தை செலுத்திய சாரதியின் தூக்கத்தால் சடுதியான வாகன தடுப்பை செலுத்தியதால் சனநடமாட்டம் குறைந்த இவ்விடத்தில் வாகனம் நிலைகுழைந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை அவ்வீதியில் வந்துகொண்டிருந்த இன்னுமொரு பேருந்தில் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு செங்கடி வைத்தியசாலையில் 
அனுமதித்தனர்.
மேலும் குறித்த விபத்தில் சிறுமி சுவர்த்தினி (7) என்பவர்கள் காயமுற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவாதகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் ஆசிரியர் பாஸ்கர் குடும்பத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துகுள்ளாக்கியுள்ளதாக அறிய முடிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


இமையாளன் பகுதியைச் சேர்ந்த 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது

யாழ்ப்பாணத்தில் நான்கு மாத குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை அதிகாரி சதாசிவம் சிவராஜா. உத்தரவிட்டார்
வல்வெட்டித்துறை இமையாளன் பகுதியைச் சேர்ந்த அ.அஸ்மிதா என்ற நான்கு மாத குழந்தை சனிக்கிழமை (26) இரவு உயிரிழந்தது.
குழந்தையின் தாயும் தந்தையும் சில தினங்களுக்கு
 முன்னர் பிரிந்து வாழும் நிலையில் குழந்தை இறந்ததால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை வல்வெட்டித்துறை பொலிசில் முறையிட்டுள்ளதையடுத்தெ குறித்த உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>