siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 21 செப்டம்பர், 2020

சவுதியில் மட்டும் கொரோனாவினால் 28 இலங்கையர்கள் மரணம்


சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.சவுதி அரேபியாவில் உள்ள
 இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
கடந்த நான்கு மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் 
அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்த நாட்டினதும், சர்வதேசத்தின்
 சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதேவேளை, 
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 
எண்ணிக்கை 3,287 ஆக அதிகரித்துள்ளதுடன் 185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனாவில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 3,088 ஆக உயர்வடைந்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கடும் காற்று தலைமன்னாரில் மரம் முறிந்து வீழ்ந்து மின்சாரம் துண்டிப்பு

 

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராமத்தின் வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மரியாள் வீதியில் அமைந்துள்ள கன்னியர் மடத்தின் வளாகத்திலுள்ள பாரிய 
புளிய மரம் ஒன்று, இன்று (திங்கட்கிழமை) காலை வீசிய பலத்த காற்று காரணமாக தூரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.குறித்த மரம், அருகில் நின்ற தென்னை மரத்தையும் முறித்து வீதியின் எதிர் பக்கமுள்ள வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.இதன்காரணமாக வீட்டிற்கு 
பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 
குறித்த பகுதிக்கான மின்சாரம், தொலைத் தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இவ்விடயம் தொடர்பாக கிராம அலுவலகர் மற்றும்
மன்னார் மாவட்ட அனார்த்த 
முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும், குறித்த பகுதிக்கு வந்த மின்சார சபை அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்து மேலதிக நடவடிக்கைகளை 
மேற்கொண்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம செய்தி >>>

மரண அறிவித்தல் திரு பாலசிங்கம் பாலசங்கர்.20.09.20

 

மறைவு .20.09.2020
யாழ் உடுவில் பிரதேச செயலக உத்தியோகத்தர் பாலசிங்கம் பாலசங்கர் அவர்கள்.20.09.2020.அன்று  இறைபதம் அடைந்தார்.
இவர் நல்லூர், கோப்பாய் பிரதேச செயலகங்களில் பணியாற்றிய இவர் பல சமூக மட்ட அமைப்புக்களிலும் இணைந்து அரும்பேரும் சேவையாற்றியவராவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>





பென்சில்வேனியாவில் 51,000 ஆயிரம் வீரர் இறந்த இடத்தில் உலவும் பேய்

 

அமெரிக்க பென்சில்வேனியாவில் மாபெரும் யுத்தம் நடந்த இடத்தில், 2 உருவங்களை தாம் கண்டதாக ஒருவர் 
உண்மையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது காரின் முன்னால் பொருத்தப்பட்டு இருந்த டாஷ் காம் என்னும் கமராவில் பதிவாகியுள்ள வீடியோ  அமெரிக்க யுத்தம் ஒன்றில், சுமார் 5,000 ஆயிரம் குதிரைகளோடு அங்கே 51,000 ஆயிரம் படையினர் கொல்லப்பட்டார்கள்.
குறித்த இடத்தில் தற்போது இரவில் காரில் சென்ற நபர் ஒருவரின் கமராவில் சிக்கிய வீடியோ தான் இவை. இதைப் பார்த்து அமெரிக்க விஞ்ஞானிகளே அரண்டு போய் உள்ளார்கள். 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

கண்டியில் குழந்தையின் பெற்றோரும் இடிபாட்டுக்குள் சிக்கி பலி

ண்டி – பூவெலிக்கட பகுதியில் வீட்டின் மீது ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காணாமல் போன தம்பதியினரும் 
பலியாகியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று உட்பட மூவர் மீட்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாதமுடைய குழந்தை முன்னதாக மரணமடைந்திருந்தது.
இந்நிலையில் காணாமல் போன குழந்தையின் தாயும், தந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ரத்மல்யாயவில் பரிசோதனை ரயில் மோதி இளைஞன் காயம்

புத்தளம் – ரத்மல்யாய பிரதேசத்தில்.20-09-20. இன்று காலை சிறிய ரக லொறியொன்றுடன் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் 
காயமடைந்துள்ளார்.
பாலாவி ஹிஜ்ரத்புரம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



வெள்ளி, 18 செப்டம்பர், 2020

செங்கலடியில் வீதியில் சென்றோரை அடித்து தூக்கிய கார்; ஒருவர் பலி

 

மட்டக்களப்பு – செங்கலடியில்.18-09-20. இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியகியுள்ளார்.
வேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக சென்றோரை மோதியுள்ளது.
இதன்போது ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொம்மாதுரையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான  சிவசுப்பிரமணியம் ரமேஷ்குமார் (வயது-40) என்பவரே
 உயிரிழந்துள்ளார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ரயிலில் குதித்து தற்கொலை செய்த பிரபல நிதி நிறுவன முகாமையாளர்

 

அநுராதபுரத்தில் உள்ள ஒரு பிரபலமான நிதி நிறுவனத்தின் கிளையின் முகாமையாளராக இருந்த அதிகாரி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில்
 குதித்து குறித்த
 நபர்.17-09-20. நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பரசங்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரண்டு
 பிள்ளைகளின் தந்தையும், பிரபல நிதி நிறுவனத்தின் முகாமையாளருமான 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மெதகம பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்த அவர், மெதகம ரயில் நிலையம் அருகே 
மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ரயிலில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பரசங்கஸ்வெவ 
மற்றும் மெதகம ரயில் நிலையங்களுக்கு இடையில் வடக்கு ரயில் பாதையில் பயணித்த யாழ் தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இதனையடுத்து, 
ரயில் நிறுத்தப்பட்ட பின்னர், சடலம் மதவாச்சிய ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் பரசங்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 செப்டம்பர், 2020

மரண அறிவித்தல் திரு.பரமகுரு திருஞானசம்பந்தர் 16.09.20

 

யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் சரசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட 
திரு. பரமகுரு திருஞானசம்பந்தர் (சம்பந்தர் ) 
முன்னாள் ப.நோ. கூ சங்க  கிளை முகாமையாளர் அவர்கள் 16.09.2020 புதன்கிழமையன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். 
.     அன்னார் மங்களேஸ்வரியின் அன்புக் கணவரும் ஆரணியின் 
பாசமிகு தந்தையும்.
சுந்தரமூர்த்தி, வனிதாமணி, தவமணி, பரமேஸ்வரி, நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதர்ரும் ஆவார் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ராகலயில் சிறுமியை மோதித் தள்ளிய லொறி.!பரிதாபமாகப் பலியான சிறுமி¨

 

நுவரெலியா -ராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலப்பனை பிரதான வீதியின் 70 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.வீதியின் குறுக்காக
 பயணித்த சிறுமி மீது லொறியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.ராகல, சூரிய கந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 16 செப்டம்பர், 2020

மட்டக்களப்பில் பிறந்து 40 நாட்களேயான சிசு கொடூரமாகப் படுகொலை

 

 பிறந்து 40 நாட்களேயான பச்சிளம் சிசு கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த சம்பவம் மட்டக்களப்பு – வன்னியார் வீதியில் உள்ள வீடொன்றில்.15-09-20. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.பிறந்து நாற்பது நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் சம்பவ தினமான.15-09-20. நேற்று செவ்வாய்க்கிழமை வழமைபோல கணவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில்,உறவினர்களுடன் வீட்டில் சிசுவுடன் தாய் இருந்துள்ளதாகவும் 
மாலை 5.30 மணியளவில் உறவினர்கள் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் குழந்தையுடன் தாய் தனிமையில் இருந்ததாகவும்,அப்போது குழந்தையை வீட்டின் அறையில் கட்டிலில் படுக்கவைத்துவிட்டு வீட்டின் கதவை மூடிவிட்டு மலசலகூடத்திற்கு சென்று திரும்பி வந்தபோது, 
கட்டிலில் படுக்கவைத்த குழந்தை காணாமல் போயுள்ளதாகவும்
இதனையடுத்து குழந்தையை 
வீடுமுழுவது தேடிய
 நிலையில் கணவர் மற்றும் உறவினர்களுக்கு இது தொடர்பாக தெரியப்படுத்திய பின்னர், அவர்களும் தேடிய நிலையில் வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த கிணற்றில் உயிரிழந்த நிலையில், குழந்தை இருப்பதை கண்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தடயவியல் பிரிவு மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகப் பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

நாட்டில் விரைவில் 100 ரூபாவைத் தாண்டும் தேங்காய் விலை

நாட்டில் தேங்காயின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் 
காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில்
 மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, 
அதில் 150 மில்லியன் தேங்காய்கள் மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெங்கு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் 
தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்ரு எண்ணிக்கை அதிகரிப்பு

 

இலங்கையில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த
 எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது.அதில் ஒருவர், கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்த கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 11 பேர், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 5 பேர், பஹ்ரைனிலிருந்து வருகை தந்த நால்வருக்கும் கட்டார், வியட்நாட் மற்றும் குவைட் ஆகிய நாடுகளிலிருந்து வருகை 
தந்த தலா ஒவ்வொருவருக்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதேநேரம், பங்களாதேஷில்
 இருந்து வந்த 4 பேருக்கும் இவ்வாறு 
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 5 ஆக அதிகரித்துள்ளது.இதனையடுத்து மேலும் 244 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில்
 சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை நேற்று மாலை சிலாபம் வைத்தியசாலையில் கொரோனா
 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதற்கமைய இலங்கையில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





மரண அறிவித்தல், நடராசா வன்னியசிங்கம் பிள்ளை 14 09 20


பிறப்பு-22 11 1940--இறப்பு-14 09 2020
Brunei யைப் பிறப்பிடமாகவும், யாழ். சீனட்டி வதிரியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா வன்னியசிங்கம் பிள்ளை (பிள்ளை அண்ணை) அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
 குகசோதி(சோதி) அவர்களின் ஆருயிர்த் துணைவரும்,
 கோமதி(அவுஸ்திரேலியா), சுரேகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 கஜேந்திரா(அவுஸ்திரேலியா), Stafen Burla(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
 சிவபாதசுந்தரம்(இலங்கை), பரராசசிங்கம் பிள்ளை(அவுஸ்திரேலியா), குலசிங்கம் பிள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 காலஞ்சென்ற விமலாசோதி, ஜெயசோதி(ஜேர்மனி), குகரூபன்(இலங்கை), சிவரூபன்(ஜேர்மனி), கமலசோதி(ஜேர்மனி), யோகசோதி(இலங்கை), உகந்தசோதி(சுவிஸ்), உகந்தரூபன்(சுவிஸ்), மீனசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
 ஓவியா, நேகா(அவுஸ்திரேலியா), சான்வி(சுவிஸ்) ஆகியோரின் ஆசை அம்மப்பாவும் ஆவார்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு17th Sep 2020 9:00 AMபார்வைக்கு Get DirectionWednesday, 16 Sep 2020 1:00 PM - 4:30 PM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerlandகிரியை Get DirectionThursday, 17 Sep 2020 9:00 AM - 11:00 AM
Friedhof am Hörnli
Hörnliallee 70, 4125 Riehen, Switzerland
தொடர்புகளுக்கு
 சுரேகா - மகள்Mobile : +41788233413   சோதி - மனைவிMobile : +41616810944   ரவிMobile : +41797781431  
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 14 செப்டம்பர், 2020

இலங்கையில் செயற்கை முட்டைகள் பற்றிய உடன் முறையிடுமாறு அறிவிப்பு

செயற்கை முட்டைகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட சந்தேகங்கள் எவர்மீதாவது ஏற்படின் உடனடியாக, அந்தந்த பிரதேச பொதுப் பரிசோதகர்களிடம் முறையிடுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் 
கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரண அறிவித்தல் திருமதி இராசு பொன்மலர் 14-09-20

 

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020 
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  இராசு பொன்மலர் 
அவர்கள் 14-09-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கய னி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா  (ஆசிரியை ) சசிகலா துவாரகா
 (கோப்பாய் ஆசிரிய கலாசாலை  )சற்குணரா  
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும் 
திரு தேய்வேந்திரம்   மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின்  அன்புச்சகோதரியும் 
  ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா   அபிஷ்னா கபீஷன்   சங்கீத்  சபீஸ்ணா  ஹரிஷ்வின் யதிஸ்னா 
  பவிஷனன் நைனிஹா  ஆகியரின்   பேத்தியும்  ஆவர்    
 அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை  இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
  துயருறும் கணவர்  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் மருமக்கள் பெறாமக்கள்
பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்  நண்பர்கள்அணை வருக்கும் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன 
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






கட்டுகஸ்தோட்டைப் பாலத்திலிருந்து குதித்து யுவதி தற்கொலை

கட்டுகஸ்தோட்டைப் பாலத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதன் போது வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை
 நிறுத்தி இளம் பெண் நீரில் மூழ்கி உயிரிழப்பதை 15 சாரதிகள் காணொளி  எடுத்துள்ளனர்.குறித்த சாரதிகளுக்கு
 கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2000 ரூபா அபராதம் விதிப்பதற்கு 
கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நடவடிக்கை
 எடுத்துள்ளனர்.கடந்த 11ஆம் திகதி இந்த இளம் பெண் காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் பாலத்தில் இருந்து 
குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
இதன் போது 300 பேர் வரையில் அவ்விடதில் கூடி இளம் பெண் உயிரிழப்பதனை காணொளி  எடுத்துள்ளனர்.பாலத்தின் மீது 
பயணித்துக் கொண்டிருந்த 
சாரதிகள் வாகனத்தை 
பாலத்தில் நிறுத்தி விட்டு, வீடியோ எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வவுனியா வைத்தியசாலை மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமி தற்கொலை மிரட்டல்

வவுனியா வைத்தியசாலையின் மாடிக்கட்டத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த சிறுமியால் வவுனியா வைத்தியசாலை வளாகத்தில்.14-09-20. இன்று பரபரப்பான சூழ்நிலை 
ஏற்பட்டிருந்தது.குறித்த சிறுமி 
வைத்தியசாலையின் இரண்டாவது மாடிக்கட்டடத்தில் ஏறி கீழே குதிக்க போவதாக
 தெரிவித்தநிலையில், விரைந்து செயற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் மாடிக்கட்டடத்தில் ஏறி சிறுமியை 
மீட்டிருந்தனர்.ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த 15 வயதான சிறுமியே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சிசெய்ததுடன், காதல் விவகாரத்தினாலேயே தான் தற்கொலைக்கு முயன்றதாக 
அங்கிருந்தவர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த சம்பவத்தால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் பலி

அவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.விக்டோரியாவின் Mildura பகுதியில் Murray ஆற்றில் மூழ்கி 21 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.11-09-2020..அன்று தனது நண்பர்களுடன் குறித்த ஆற்றுக்குச் சென்ற
 இளைஞன் நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டது.இவரைத் தேடும்பணி வெள்ளி பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில் குறித்த
 இளைஞரின் சடலம் ஆற்றிலிருந்து 
மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மெல்பேர்னில் கல்விகற்றுவரும் 
இலங்கையைச் சேர்ந்த 21 வயது தமிழ் இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் Mildura-வுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மாணவன்.விபத்த்தில் பலி

 

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும்,பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் நொச்சிக்குளம் பகுதியில் சென்று
 கொண்டிருந்த போது அதே திசையில் 
துவிச்சக்கர வண்டியில் பயணித்த
 சிறுவனுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த
 நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த இ.புவிதன் (14) என்ற மாணவன் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில்
 இராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
இவர் புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் 
ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.சடலம் தற்போது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மற்றையநபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>