மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் கிராமத்தின் வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மரியாள் வீதியில் அமைந்துள்ள கன்னியர் மடத்தின் வளாகத்திலுள்ள பாரிய
புளிய மரம் ஒன்று, இன்று (திங்கட்கிழமை) காலை வீசிய பலத்த காற்று காரணமாக தூரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.குறித்த மரம், அருகில் நின்ற தென்னை மரத்தையும் முறித்து வீதியின் எதிர் பக்கமுள்ள வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.இதன்காரணமாக வீட்டிற்கு
பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன்
குறித்த பகுதிக்கான மின்சாரம், தொலைத் தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இவ்விடயம் தொடர்பாக கிராம அலுவலகர் மற்றும்
மன்னார் மாவட்ட அனார்த்த
முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.மேலும், குறித்த பகுதிக்கு வந்த மின்சார சபை அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்து மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக