siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 21 ஜூலை, 2026

யாழில் தலைகள் துண்டிக்கப்பட்டு புதைகுழியினுள் படுகொலை

யாழ் .செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக புதைக்கப்பட்டமை இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது மண்டையோடுகள் அற்ற என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சில மண்டையோடுகள் என்புக்குவியல்களுடன் தனித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மண்டையோடுகள் அற்ற நிலையில் சில என்பு கூடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சில மண்டையோடுகள் குவியலாக காணப்படுகிறது. மனித என்புக்கூடுகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலாக காணப்படும் மண்டையோட்டு தொகுதிகள் , மண்டையோடு அற்ற என்புக்கூடுகளுக்கு உரியனவா என்பதனை தீர்மானிக்க முடியுமென
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மற்றும் தூதுவர் எட்டுப் பேர் அடங்கிய உயர்மட்ட குழு நாளை காலை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மரண அறிவித்தல் அமரர் முருகேசு கமலாசினிதேவி (வவி )

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-21-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு  கமலாசினிதேவி  (வவிஅக்கா  ) 21-07-2026.-அன்று  காலமானார் 
 அன்னார் காலம்சென்ற  முருகேசு அவர்கனின் பாசமிகு மனைவியும் காலம்சென்ற சுந்தரமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகளும் காலம்சென்ற ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மருமகளும் சிவரூபி பிரபன் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  22-07-2026.. புதன்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
22-07-2026..புதன்கிழமை  அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 வீட்டு முகவரி: 
இலங்கை 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html




திங்கள், 20 ஜூலை, 2026

நாட்டில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற
 பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
 அனுமதிக்கட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த வீட்டின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்
 கிடைத்துள்ளது.
 இதனையடுத்து, சந்தேக நபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களில் இருவர் பொகுந்தர, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸார் அவர்களை
 சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியதுடன், பின்னால் அமர்ந்திருந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை 
 தாக்கியுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேக நபர் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளும்
, துப்பாக்கிச் சூட்டில் 
இடுப்பில் குண்டு பாய்ந்து காயமடைந்த பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்கள் பிரபல திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொஸ் மல்லி’ என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாட்டில் கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு

நாட்டில்.யாழ் தென்மராட்சி  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் நேற்று  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்
 உயிரிழந்துள்ளார். 
 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில்
 தெரியவந்துள்ளது. 
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 தற்போது சடலம் பருத்தித்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஜூலை, 2026

நாட்டில் வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பொலிஸ் உயிரிழப்பு

இலங்கையில். வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் 
உயிரிழந்தார்.
இரட்டப்பெரியகுளம்-வவுனியா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் அவ் அதிகாரி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்களில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 
 உயிரிழந்தவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 45 வயது பொலிஸ் சார்ஜென்ட் என்றும், மாத்தளையைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஜூலை, 2026

ஆண்டுதோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு

மின்னல் தாக்குதலால் ஆண்டு தோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  
உயிரிழப்பதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநரான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மின்னல் பாதுகாப்புக்கு போதிய கவனம் செலுத்தப்படாத காரணத்தால், ஏராளமானோர் மின்னல் தாக்குதலால் காயமடைகின்றனர் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார். 
 இந்த நிலையைக் கட்டுப்படுத்த,  தேசிய மின்னல் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 16 ஜூலை, 2026

நாட்டில் வாய் புற்றுநோயால் ஒவ்வொரு நாளும் மூன்று பேர் மரணம்

நாட்டில்  வாய் புற்றுநோயால் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என வாய் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷினி பத்திராஜா
 தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் பத்திராஜா, இலங்கையில் ஆண்களிடையே வாய் புற்றுநோயே மிகவும் பொதுவான புற்றுநோயாகும் என்றும், பெண்களைப் பாதிக்கும் பத்து பொதுவான புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாகும் என்றும் 
குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை பயன்பாடு, சிகரெட் புகைத்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாகத் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வெற்றிலையுடன் பொதுவாக மெல்லப்படும் பாக்கில் காணப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் மிகவும் அபாயகரமானவை என்றும், அவை இந்நோய் உருவாகும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், இரத்தினக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் வாய் புற்றுநோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் டாக்டர் பத்திராஜா மேலும் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தத் தொழில்களுடன் தொடர்புடைய அதிகப்படியான மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல் களைப்பு ஆகியவை, அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகளாக வெற்றிலை 
மெல்லுதல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற செயல்களில் தனிநபர்களை அடிக்கடி ஈடுபடுத்துகின்றன. 
இதன் மூலம், அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் இந்தத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்க்குமாறும், வாயில் ஏற்படும்
 அசாதாரண மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். 
மேலும், வெற்றிகரமான சிகிச்சையில் ஆரம்பத்திலேயே கண்டறிவது ஒரு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 15 ஜூலை, 2026

பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் கனடாவில் பன்றிகள் மரணம்

 கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள நார்ஃபோக் கவுண்டி பகுதியில் உள்ள ஒரு பெரிய பண்ணைத் தீ விபத்தில், சுமார் 20,000 பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர்.
சிம்கோ நகருக்கு வெளியே உள்ள 'ஹைவே 3' பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பெரிய பண்ணையில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது.
பண்ணைக் கட்டிடம் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்ததால், அதனை அணைக்கப் பெருமளவிலான தீயணைப்பு வீரர்கள் 
களமிறக்கப்பட்டனர்.
இத்தீயணைப்புப் பணியில்: 8 வெவ்வேறு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 40 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
தீயின் வீரியத்தால் பண்ணைக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக மனிதர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்தத் விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 14 ஜூலை, 2026

மரண அறிவித்தல் அமரர் பரமேஸ்வரன் இராஐபூபதி (பூமணி)

துயர் பகிர்வு-தோற்றம் 10-02-1930--மறைவு-13-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் , நவற்கிரி மற்றும் கொக்குவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர் பரமேஸ்வரன் இராஐபூபதி (பூமணி) 
அவர்கள் 13-07-2026.திகள்கிழமை அன்று  கொக்குவிலில் 
காலமானார்  அன்னார் காலம்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும் சுகனியா தட்சாயினி வட்சாயினி  
 சனா நாகபூசணி ஆகியோரின் தாயாரும் ஆவர் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் 
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_14.html



திங்கள், 13 ஜூலை, 2026

தீவிபத்த்தில் பாங்காக்கில் இருபத்திஏழு பேர் மரணம் பலரின் நிலை கவலைக்கிடம்

தீவிபத்த்தில் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். 
அத்துடன் 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் தீவிபத்துக்கான காரணத்தை 
அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 12 ஜூலை, 2026

நிலநடுக்கம் வெனிசுலாவில் உயிர் இழப்புகளும் மற்றும் 17000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், உயிரிழந்தவர்களில் 315 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
சுமார் 16,740 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
மேலும், இந்தப் பேரழிவால் கிட்டத்தட்ட 17,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 11 ஜூலை, 2026

அமரர் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி,12 07.26

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- 
திதி 12-07-2026-,ஞாயிருக்கிழமை  அன்று
 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 12-07-2026.அன்று  அன்னார் காலம்சென்ற 
 திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மனைவியாரும்  காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
காலம்சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்  
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
12-07-2026-,ஞாயிருக்கிழமை   அன்று  பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் பிள்ளைகளின்  இல்லங்களில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலச்சுழற்சியில் இரண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
சகோதர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்
அன்னாரின்  ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள்  நவற்கிரி சுவிஸ் ஜெர்மன் கனடா நோர்வே   நண்பர்களும் 
இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
.இங்கனம் -
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/07/03-0724.html




வெள்ளி, 10 ஜூலை, 2026

காட்டுத்தீயில் சிக்கி தெற்கு ஸ்பெயினில் பன்னிரண்டு பேர் மரணம்

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் 
உயிரிழந்தனர்.
இந்தப் பகுதியில் இதுவரை பதிவானதிலேயே இதுதான் மிகவும் கொடிய தீ விபத்து என்றும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வரும் வேளையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் 
கண்டறியவில்லை.
அல்மேரியா மாகாணத்தில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் நகராட்சியில், N-340 நெடுஞ்சாலைக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. 
பலத்த காற்று, தீப்பிழம்புகளை அண்டை நகராட்சியான பெடாருக்கு விரைவாகப் பரப்பியது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 9 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறை கலவரம் இந்திய பிரஜை ஒருவரும் பலி

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 
உயிரிழந்தவர் 73 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த இந்திய நாட்டவரின் மரணம்
 குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஜூலை, 2026

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஏழு பேருக்கு மரண தண்டனை

நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 20 வருடங்களாக மிக நீண்ட மற்றும் விரிவான விசாரணைகள் 
நடைபெற்று வந்தன. 
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு, இறுதியாக இன்று (08) குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
சட்டவிரோதமாகக் கூடுதல், திட்டமிட்டுக் கொலை செய்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 7 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனித படுகொலையானது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2006ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் இழைக்கப்பட்ட இந்த பாரிய மனித படுகொலைச் சம்பவம் அக்காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று நீதி கிடைத்துள்ளதாக சட்டத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை
 விதிக்கப்பட்டுள்ள 
போதிலும், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணிகள் அடுத்த 14 நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ரீதியிலான 
வாய்ப்புகள் உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்திய காரணத்தை வெளியிட்ட காவல்துறை

 

நாட்டில் .சிறைச்சாலைகளில் இரண்டு பிரதான கதவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக இருப்பது இரும்புக் கதவு, அடுத்ததாக இருப்பது மரப்பலகையிலான கதவு ஆகும். 
இந்த கைதிகள் இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரப்பலகை கதவை நோக்கி வந்துள்ளனர்.
இந்த இரும்பு கதவுக்கும் மரப்பலகை கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் பார்சல் ஸ்கேன் இயந்திரம் (Parcel scan machine), பாடி ஸ்கேன் இயந்திரம் (Body scan machine) மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, இந்த கைதிகள் இரும்பு கதவையும் உடைத்துக் கொண்டு, இந்த மரக் கதவையும் கடந்து வெளியே வந்திருந்தால், அங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளைப் பற்றி என்னால் இந்த சந்தர்ப்பத்தில் 
மதிப்பிட முடியாது. 
அவர்கள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், அனைவரும் தப்பியிருப்பார்கள், அனைவரும் சமூகத்திற்குள் வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை பற்றி என்னால்
 கூற முடியாது என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 6 ஜூலை, 2026

இலங்கையில் தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்


நாட்டில் பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் 06-07-2029இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
இந்த விழிப்புணர்வு வேலை திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆரம்பித்து வைக்கவுள்ளார். 
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 5 ஜூலை, 2026

மரண அறிவித்தல் அமரர் சின்னையா இராசையா

 

துயர் பகிர்வு-தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் சின்னையா இராசையா  ( ராசு )அவர்கள் 04-07-2026...அன்று காலமானார் அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  )திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  07-07-2026.. செவ்வாய்க்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
07-07-2026.. செவ்வாய்க்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html



சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் பெற்றோரின் கவனத்திற்கு குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

நாட்டில் குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் 
டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். 
அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு 
வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். 
வழக்கமாக குணமடைய ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், சில காலங்கள் கழித்தும்கூட பசி திரும்புதல், சுறுசுறுப்பாகவும் 
மகிழ்ச்சியாகவும் மாறுதல் போன்ற முன்னேற்றத்தின்
 அறிகுறிகள்
 தென்படாமல் போகலாம் எனவும் அவர எச்சரிக்கை விடுத்துள்ளார்த. 
அது ஹீமோஃபேகோசைடிக் லிம்ஃபோஹிஸ்டியோசிஸ் (HLH) எனப்படும் அரிதான நோயெதிர்ப்பு தொடர்பான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தொடர்ந்து அகற்றுமாறும், குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொசுக்கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து

நாட்டில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில்-03-07-2026- இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற கன்ரர் வாகன விபத்தில் நால்வர் 
காயமடைந்துள்ளனர்.
கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நேரிட்ட சமயம் வாகனத்தில்
 ஐவர் பயணித்த 
நிலையில், காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html