siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கனடாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மரணம்

கனடாவின் ஸ்டோனி டிரெயில் சாலையில் தவறான திசையில் சென்ற வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில், சூட்'இனா பார்க்வே அருகே நிகழ்ந்துள்ளது. அப்போது, ​​வடக்கு நோக்கிய பாதையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 30 வயது நபர் ஓட்டி வந்த 2011 மெர்சிடிஸ் பென்ஸ் C350, எதிரே வந்த 2016 சுபாரு இம்ப்ரேசா மீது மோதியதாக 
காவல்துறை நம்புகிறது.
"சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கார் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் கண்டறிந்தனர்" என்று காவல்துறை அதிகாரி 
தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், கால்கரி தீயணைப்புத் துறை, சம்பவ இடத்திற்கு வந்தவுடன், குழுவினர் "உடனடியாக தீவிர தீயணைப்புப் பணியைத் தொடங்கினர்.
மெர்சிடிஸ் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூவரும், சுபாரு காரில் தனியாக இருந்த 43 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
52 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த செவி ஈக்வினாக்ஸ் காரும் மெர்சிடிஸ் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது. அவரும் மூன்று இளைஞர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாடில் கேகாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:பதின் எட்டு பேர் காயம்

நாடில் கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று 03 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 18 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அமரர் சின்னையா இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி மாணிக்கப்  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட  அமரர் சின்னையா இராசையா  ( ராசு)   அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-08-2026-சனிக்கிழமை அன்று அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  
)திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
 01-08-2026-  ,சனிக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையினிலும் ஆத்மா   சாந்திப்பிரத்தனையும்  வீட்டுக்கிருத்திய கிரியைகள்     
03-08-2026-அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்கள்  மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.htm





 

சனி, 1 ஆகஸ்ட், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மேலும் மூன்று படகுகளைத் தேடும் பணிகள்

நாட்டில்  நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ளதாக, கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது. குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு
 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், குறித்த படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.
அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 31 ஜூலை, 2026

மசூதியில் கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் கார்னி கண்டனம்

கனடா பிரதமர் மார்க் கார்னி, வின்னிபெக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, இஸ்லாமிய வெறுப்பின் "அதிர்ச்சியூட்டும்" செயல் என்று 
கண்டித்துள்ளார்.
கனடாவின் மனிடோபா மாகாணத்தின் தலைநகரில் உள்ள ரஹ்மா இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் 
காயம் ஏற்படவில்லை.
"இஸ்லாமிய வெறுப்பின் இந்த வன்முறைச் செயல் அதிர்ச்சியூட்டுகிறது, இதற்கு கனடாவில் இடமில்லை. யாருக்கும் காயம் ஏற்படாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று கார்னி 
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சட்ட அமலாக்கத் துறைக்கு எனது முழு ஆதரவும் உண்டு" என்று கார்னி குறிப்பிட்டுள்ளார்  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 30 ஜூலை, 2026

நாட்டில் .கனகராயன்குளத்தில் கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

நாட்டில் வவுனியா, கனகராயன்குளம் பகுதி ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்புப் படையினரால் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 29 ஜூலை, 2026

நாட்டில் ஊழல் ஒழிப்பு அதிரடிப் படை அதிகாரி பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

நாட்டில் வலன ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காயமடைந்த காவலர், பனதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் காவலர், பேராதனை, முருதலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 28 ஜூலை, 2026

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் ஆறு பேர் உயிரிழப்பு

இலங்கையில் பல பகுதிகளில் நேற்று (27) பதிவான தொடர் சாலை விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். 
 திருக்கோவில்–பொத்துவில் சாலையில் உள்ள வினயகபுரம் 01 என்ற இடத்தில் நேற்று நடந்த முச்சக்கர வண்டி விபத்தில் 49 வயதுடைய  பெண் ஒருவர் உயிரிழந்தார். 
பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த முச்சக்கர வண்டி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி ஒரு கான்கிரீட் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பின்  இருக்கையில் பயணித்த இரண்டு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
அங்கு அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 
அதேபோல்   பேட்டை–கொத்தட்டுவா சாலையில் கொத்தட்டுவா நகருக்கு அருகே நடந்த மற்றொரு விபத்தில், எதிர் திசையில் பயணித்த ஒரு முச்சக்கர வண்டி, பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த 
பேருந்துடன் மோதியது.
 இதில 37 வயதான முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஓட்டுநர், ஒரு ஆண் பயணி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு பெண் ஆகியோர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
மேலும் வேரபொலவில் குருநாகல்-புத்தளம் சாலையில் நடந்த மோதலில் 67 வயதான இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 
 பொலிஸாரின் கூற்றுப்படி, புத்தளத்தை நோக்கிச் சென்ற 
ஒரு கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ​​எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து
 நிகழ்ந்துள்ளது. 
வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழந்தார், அதே சமயம் கார் ஓட்டுநரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் 6 கி.மீ. மைல்கல் அருகே நேற்று அதிகாலை மற்றொரு கோர விபத்து
 நிகழ்ந்துள்ளது. 
 கெரவலபிட்டியாவிலிருந்து கொட்டாவா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சரக்குந்து, இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லருடன் கூடிய ஒரு பிரைம் மூவர் மீது மோதியது. 
 சரக்குந்து ஓட்டுநரும், முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணியும் படுகாயமடைந்து ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 21 வயதான அந்தப் பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
இதற்கிடையே  திஸ்ஸமஹாராமவில், நேற்று இரவு திஸ்ஸமஹாராம குளக்கரைச் சாலையில் 6 கி.மீ. கல் அருகே, தெபரவெவவிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் 38 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். 
படுகாயமடைந்த அவர், தெபரவெவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நேற்று இரவு நடந்த மற்றொரு சம்பவத்தில், சிலாவ் பொலிஸ் பிரிவில் உள்ள பங்காதெனிய–பல்லம சாலையில் 5 கி.மீ. கல் அருகே, தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து 
சாலையிலிருந்து விலகி ஒரு வடிகாலில் விழுந்த 24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 
 வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்து, சிலாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 
 அனைத்து சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 27 ஜூலை, 2026

உணவுத் திருவிழாவில் .அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இரண்டு பேர் பலி, ஐந்து பேர் காயம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், சிறு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். 
வொஷிங்டன் மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவின் போது திடீரென இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தாக்குதல் நடத்திய நபர் குறித்தோ அல்லது இதற்கான காரணம் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், தப்பியோடிய நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஜூலை, 2026

வீட்டின் கூரையின் மீது ஜெர்மனியில் விமானம் மோதியதில் இருவர் மரணம்

வடமேற்கு ஜெர்மனியில் ஒரு வீட்டின் கூரையின் மீது சிறிய தனியார் விமானம் மோதியதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓல்டன்பர்க்கிற்கு அருகிலுள்ள காண்டர்கேசி என்ற குடியிருப்புப் பகுதியில், சிறிய விமானம் ஒரு வீட்டின் சாய்வான கூரையின் மீது
 நேருக்கு நேர் மோதியது.
பிரேமனைச் சேர்ந்த 65 மற்றும் 77 வயதுடைய இரு ஆண்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவரைக் காணவில்லை என்றும் காவல்துறை முதலில் தெரிவித்திருந்தது.
ஆனால், விமானத்தின் சிதைவுகளை மீட்கும் நீண்ட மற்றும் சிக்கலான மீட்புப் பணிகளுக்குப் பிறகு விபத்தில் இரு ஆண்களும் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 25 ஜூலை, 2026

நாட்டில் டெங்கு வேகமாக பரவுகிறது: இந்த ஆண்டில் அறுபத்தி ஒரு உயிரிழப்புகள்

இலங்கையில்  இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக பதிவாகியுள்ளது.
இந்த காலப்பகுதியில் மட்டும் 25,530 புதிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 17,135 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 
அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 16,140 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,574 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், கொசு பெருகும் இடங்களை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

                                  https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html                                                                                                                                                                                                                                                                                                 


 

வெள்ளி, 24 ஜூலை, 2026

நாட்டில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

நாட்டில்  வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 23 ஜூலை, 2026

நாட்டில் தெமட்டகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் படுகாயம்

நாட்டில் தெமட்டகொடவில் உள்ள குப்பியவத்த மயானத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 
 இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 
இருவர், மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இருவரால் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 22 ஜூலை, 2026

தமிழ் கட்சிகளை யாழில். சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து  விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை 
வந்தடைந்தனர்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் 
க.சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 21 ஜூலை, 2026

யாழில் தலைகள் துண்டிக்கப்பட்டு புதைகுழியினுள் படுகொலை

யாழ் .செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக புதைக்கப்பட்டமை இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது மண்டையோடுகள் அற்ற என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சில மண்டையோடுகள் என்புக்குவியல்களுடன் தனித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மண்டையோடுகள் அற்ற நிலையில் சில என்பு கூடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சில மண்டையோடுகள் குவியலாக காணப்படுகிறது. மனித என்புக்கூடுகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலாக காணப்படும் மண்டையோட்டு தொகுதிகள் , மண்டையோடு அற்ற என்புக்கூடுகளுக்கு உரியனவா என்பதனை தீர்மானிக்க முடியுமென
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மற்றும் தூதுவர் எட்டுப் பேர் அடங்கிய உயர்மட்ட குழு நாளை காலை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மரண அறிவித்தல் அமரர் முருகேசு கமலாசினிதேவி (வவி )

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-21-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு  கமலாசினிதேவி  (வவிஅக்கா  ) 21-07-2026.-அன்று  காலமானார் 
 அன்னார் காலம்சென்ற  முருகேசு அவர்கனின் பாசமிகு மனைவியும் காலம்சென்ற சுந்தரமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகளும் காலம்சென்ற ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மருமகளும் சிவரூபி பிரபன் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  22-07-2026.. புதன்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
22-07-2026..புதன்கிழமை  அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 வீட்டு முகவரி: 
இலங்கை 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html




திங்கள், 20 ஜூலை, 2026

நாட்டில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற
 பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
 அனுமதிக்கட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த வீட்டின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்
 கிடைத்துள்ளது.
 இதனையடுத்து, சந்தேக நபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களில் இருவர் பொகுந்தர, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸார் அவர்களை
 சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியதுடன், பின்னால் அமர்ந்திருந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை 
 தாக்கியுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேக நபர் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளும்
, துப்பாக்கிச் சூட்டில் 
இடுப்பில் குண்டு பாய்ந்து காயமடைந்த பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்கள் பிரபல திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொஸ் மல்லி’ என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாட்டில் கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு

நாட்டில்.யாழ் தென்மராட்சி  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் நேற்று  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்
 உயிரிழந்துள்ளார். 
 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில்
 தெரியவந்துள்ளது. 
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 தற்போது சடலம் பருத்தித்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஜூலை, 2026

நாட்டில் வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பொலிஸ் உயிரிழப்பு

இலங்கையில். வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் 
உயிரிழந்தார்.
இரட்டப்பெரியகுளம்-வவுனியா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் அவ் அதிகாரி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்களில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 
 உயிரிழந்தவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 45 வயது பொலிஸ் சார்ஜென்ட் என்றும், மாத்தளையைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஜூலை, 2026

ஆண்டுதோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு

மின்னல் தாக்குதலால் ஆண்டு தோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  
உயிரிழப்பதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநரான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மின்னல் பாதுகாப்புக்கு போதிய கவனம் செலுத்தப்படாத காரணத்தால், ஏராளமானோர் மின்னல் தாக்குதலால் காயமடைகின்றனர் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார். 
 இந்த நிலையைக் கட்டுப்படுத்த,  தேசிய மின்னல் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html