siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

தந்தை, மகன் மினுவாங்கொடவில் அடித்துக் கொலை!

மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் இரு சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இன்று (26.08.2017) காலை மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கைகலப்பின்போது இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை...

சனி, 26 ஆகஸ்ட், 2017

ஓட்டமாவடியில் கடைகளை உடைத்து தொலைபேசிகள் திருட்டு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி.  மேமன் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர், வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையங்களை உடைத்து திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். குறித்த...

எரிபொருள் நிலையம் தீயினால் எரிந்து நாசம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கம்பஹா - கலகெடிஹேன பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் ஒன்றில் ஏற்பட்ட தீ, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியுள்ளது. இதன்காரணமாக, கண்டி - கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சம்பவத்தை அடுத்து, கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினால்...

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சர்வோதய நகர் கிராமத்தில் யானையின் அட்டகாசம் பயிர்கள் சேதம்

மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கிராமமான சர்வோதய நகர் கிராமத்தில் யானை வளவுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் விரட்டியுள்ளது. நேற்று இரவு சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சனை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  யானை வேலி அடைப்பதற்கான கட்டைகள் பல இடங்களில்...

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கார் விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

கேகாலை - பிடகல்தெனிய, குருகொடை ஓயாவில் பாய்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த தாய், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுகண்ணாவை பிரதேசத்தினை சேர்ந்த குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், 57 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் இதில் பலியாகியுள்ளனர். கொழும்பிலிருந்து...

மரண அறிவித்தல்,திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.

யாழ்அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.அன்று சிவபதம் அடைந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்து கொள்ளுகின்றோம் தகவல்  குடும்பத்தினர் ...

மரண அறிவித்தல்,திரு நாகலிங்கம் ஐயாத்துரை -16.08.17.

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2017 யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஐயாத்துரை அவர்கள். (இவர்  ஓய்வு பெற்ற நவற்கிரி அ .மி. த. க. பாடசாலை ஆசிரியர் ஆவார்)16-08-2017 புதன்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார். அன்னார், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற...

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் முச்சக்கர வண்டி குடை சாய்ந்து இருவர் படுகாயம்

ஹற்றன் - மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே, நோர்வூட் - ரொக்குட் பகுதியில் குடைசாய்ந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து...

மரண அறிவித்தல் செல்வன் சுதர்சன் அபிஷேக்-14-08-17.

மண்ணில் : 27 மார்ச் 2017 — விண்ணில் : 14 ஓகஸ்ட் 2017 சுவிஸ் (Thurgau) துர்காவுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சுதர்சன் அபிஷேக் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று  இறைவனடி எய்தினார். அன்னார் அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன் உமாதர்சினி-  தம்பதிகளின் அன்பு மகனும்   அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காத்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்ற...

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

விரைவில் புதிய மின்சார ரயில் இலங்கையில் சேவை!

இலங்கையில் மின்சார புகையிரதசேவையினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை, பொல்காவலை, கோட்டை, நீர்கொழும்பு, களனி வெளி பகுதிகளில் 158 கிலோ மீற்றர்களை கொண்ட புகையிரத பாதைகளில் இந்த மின்சார புகையிரத சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை  சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த...

சனி, 12 ஆகஸ்ட், 2017

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் தீக்குள் வீழ்ந்த பெண்!

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று  தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது. காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது...

லிந்துலையில் பச்சிளம் சிசுவை புதைத்து வைத்த இரு பெண்கள் கைது

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை ஏழாம் இலக்க கொலனியில் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். லிந்துலை பகுதியில் நேற்று முன்தினம் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றை சிசுவின் தாயாரும், பாட்டியும் இணைந்து புதைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் குறித்த சிசுவின் தாயையும், சிசுவின் பாட்டியையும் இன்றைய தினம் கைது செய்து...

மரண அறிவித்தல் திரு வல்லிபுரம் கார்த்திகேசு.09.08.17

பிறப்பு : 29 மே 1940 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017 யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கார்த்திகேசு அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின்  அன்பு மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், சுகுமாரன்(சுகு- சுவிஸ்), சுமங்கலா(சுமதி- லண்டன்), சுதாகரன்(கரன்– ஜெர்மனி), மோகனாம்பாள்(மோகனா-...

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கிளிநொச்சியில் யாழ் இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, இயக்கச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் முறையற்ற உறவுமுறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மனைவியின் செயற்பாடு காரணமாக மனஉளைச்சல் அடைந்த கணவன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். விஷம் அருந்திய நிலையில், பாதிக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்....

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பிரதேத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து வித்துக்குள்ளாகியுள்ளது இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்...

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நீதிபதி இளஞ்செழியன் வட்டுக்கோட்டை படுகொலை விசாரணையை நடத்த தடை!

வட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி  இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். இதற்கமையவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2014...

காடுகளில் தீ வைப்பதற்கு காரணமாக யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்! இராணுவத்தினருக்கு உத்தரவு

உலகில் காடுகளை பாதுகாப்பதில் அரசாங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக சிரத்தை எடுத்துவருகின்றன. ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களைப் பாதுகாப்பதில் உரித்துடையவர்களாகின்றார்கள். மரம் வளர்ப்போம், இயற்கையை பேணுவோம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக அமைந்திருக்கிறது. மரங்களை அழிப்பதனால் இயற்கையாக கிடைக்கும் மழை பொய்த்துப் போய்விடுகின்றது. இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர் மட்டுமன்றி, குடிநீர்க்காகவும் அலைய வேண்டியிருக்கிறது. மரங்கள்...

சனி, 5 ஆகஸ்ட், 2017

மரண அறிவித்தல் திருமதி. தயாபரன் நந்தினி .04.08.17

மறைவு  04-08-2017  யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் நந்தினி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சுந்தரலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், இராசலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,திவீஷன், திஷாந், திவர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,குமுதினி, காலஞ்சென்ற தயாபரன், சுபேந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தயாநிதி,...

புதன், 2 ஆகஸ்ட், 2017

நாளையும் குறிகாட்டுவான் நயினாதீவு படகுச் சேவை நடக்காது

குறிகாட்டுவான் – நயினாதீவு இடையே படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளரகள் நேற்றுத் தமது சேவைகளை நிறுத்தினர். அவர்களின் சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் திடீரென இங்கு படகுச் சேவையில் ஈடுபடுகின்றனர். அதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது கோரிக்கைகள்...

மரண அறிவித்தல் திருமதி. பாலசிங்கம் கமலாதேவி.01.08.17

 உதிர்வு- 01-08-2017 யாழ் சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட திருமதி.  பாலசிங்கம் கமலாதேவி. அவர்கள் 01-08-2017 அன்று இறைபதம் அடைந்தார். இவர்காலம்சென்ற வ. பாலசிங்கத்தின் அவர்களின்அன்பு மனைவியும், நந்தன்அவர்களின் பாசம்மிக்கதாயாரும் , (காலஞ் சென்ற கந்தசாமி) பரமேஸ்வரி, ‌சின்னத்துரை ( காலம்சென்ற செல்லத்துரை,  சின்னராஐாவினது சகோதரியும் ) பரமேஸ்வரி, செல்லம்மா, மலர் (காலஞ் சென்ற பரராசசிங்கம், பூபாலசிங்கம்...