தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தொண்டமனாறு கடல் நீரேரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் காணாமற்போயுள்ளார்.குறித்த இளைஞனை தேடும் பணியில் பொதுமக்கள், மற்றும் பொலிஸ் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு நீரில் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.யாழ்.தொண்டமனாறு நீரோியில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளார்.நீரோியில் நீா்மட்டம் அதிகமாக உள்ள நிலையில் குறித்த இளைஞன் நீராடிபோது நீாில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்தார்.இந்நிலையில், கடற்படையினா் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடாத்தியபூது இளஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிாிழந்த இளைஞன் 26 வயதான கந்தசாமி கஸ்துாரன் என அடையாளம்
காணப்பட்டுள்ளாா்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக