திதி -.24-01-2020.அன்று
.அன்னை மடியில் 09 ..02 .1955 ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்). அவர்களின் திதி 24-01-2020. வெள்ளிக்கிழமை அன்று
. அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன்
ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை,
நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி .24.01.2020.வெள்ளிக் கிழமை .அன்று இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
மறைந்துவிட்ட உங்கள் உறவின்
நீங்காத நினைவுகள்
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின்
உலராத வாசனை
இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்
இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு
இயற்கையின் அழைப்பு
மீற முடியாத பயணம்
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம்
காலத்தை கடந்தும் கலையவில்லை
நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தா
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்?
உன் நிழலை நிஜமாக்கி
நிலைத்திருக்கும்
காலச்சுழற்சியில் ஈராண்டு ஆண்டு கடந்து போனாலும் இன்னும்
நித்தம் நாம்
இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம்
எங்கள் அப்பா அண்னா தம்பி
உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
நிற்கின்றோம்.
அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவி பிள்ளைகள் சகோதரர் குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உற்றார் உறவினர்கள் சுவிஸ் வாழ் நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் ....
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள்
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389 பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894 கைத்தோலை பேசி : +94766092827 சின்னராசா(அப்பன்)
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871
0 கருத்துகள்:
கருத்துரையிடுக