siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 ஏப்ரல், 2021

தனியார் பேருந்து, மாகுடுகல பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்து

நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி  .29-04-2021.இன்று.காலை பயணித்த தனியார்  பேருந்து, மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் கயாமடைந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். நிலாவரை.கொம் செய்திகள் >>>...

திங்கள், 26 ஏப்ரல், 2021

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் கிளிநொச்சியில் மரணம்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ; மரணமடைந்த  நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.  இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 25-04-2021.அன்று ...

சனி, 24 ஏப்ரல், 2021

பாதுகாப்பாக கடனட்டைகளை வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

 உடுதும்பர மற்றும் அயகமவில் ஆகிய பிரதேசங்களில் கடனட்டைகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் காவல் துறையினர்  விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.உடுதும்பர பகுதியில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் அயகம பிரதேசத்தில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக...

பாரதிபுரத்தில் தாயை அவதூறாக பேசினார் என தந்தையை க்கொன்ற மகன்.

யாழ் கோப்பாயில் குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.கோப்பாய் கலாசாலை வீதி- பாரதிபுரத்தில்.23-04-2021. அன்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்தார்.நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் வீட்டுக்குச்...

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஸ்பெயினில் தாயைக் கொன்று சாப்பிட்டதாக மகன் ஒப்புதல்

ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் கிழக்கு மாட்ரிட்டில் தாயைக் கொன்று, உடலை வெட்டி, உடலின் பாகங்களை சாட்பிட்டார் என்ற குற்சாட்டில் மகன் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அந்த நபர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.நண்பர் ஒருவர் காவல்துறையினரிடம் கவலையை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைச் சுற்றி உடல் பாகங்கள் சிதறிக்கிடப்பதை கண்டுபிடித்தனர். அத்துடன் உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கொல்கலன்களில்...

வியாழன், 22 ஏப்ரல், 2021

விரைவில் கொவிட்-19 புரதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, விரைவான அதிகரிப்பு, தற்போது நாட்டில் பரவுகின்ற வைரஸ்கள் எந்த வகையானவை  மற்றும் அவை எவ்வாறு திரிபடைகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University...

புதன், 21 ஏப்ரல், 2021

அச்சுவேலிப் பொலிஸாரால் காரில் ஹெரோயின் கடத்திய தம்பதி கைது

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.வல்லைச் சந்தியில் வைத்து 20-04-2021.அன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 40 வயதுடையவரும் 38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர் எனவும்,சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என அச்சுவேலிபொலிஸார் தெரிவித்தனர். அத்துடன்...

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு குடும்பஸ்தர் ஒருவர் பலி

வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்குஇலக்காகி  உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு. கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.அல்வாய் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றைய தினம் மதியம் வாய்...

தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு பலி

தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் .19-04-2021.நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுதம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்ததாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து...

அமரர் சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா) 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.20-04-21

பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) அவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்20-04-2021. செவ்வாய்க்கிழமை  அன்று காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 22-04-2021, அன்று வியாழக்கிழமை...

திங்கள், 19 ஏப்ரல், 2021

அமரகள் இரசரட்ணம் செல்லம்மா.55ம் நாள் மயில்வாகனம் இராசரத்தினம் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.19-04-21

பிறப்பு-08-03-1940--இறப்பு-24-02 -2021.-இரசரட்ணம் செல்லம்மா-பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.மயில்வாகனம்  இராசரத்தினம் ,யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டஅமரர்கள் இரசரட்ணம் செல்லம்மா-55ம் நாள்-மயில்வாகனம்  இராசரத்தினம் ,31ம் நாள் அவர்களின் .அந்தியேட்டி  வீட்டுகிருத்திய்  அழைப்பிதழ்19-04-2021. திங்கட் கிழமை. அன்று   காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா ...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

திருமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணி ஆரம்பம்

  திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபைகளையும் இணைக்கும். இதன் நீளம் 120 மீட்டர் ஆகும். இதற்காக ரூ 75 கோடி செலவிடப்படவுள்ளது.. மூன்று கட்டங்களில் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெறவுள்ளன..குறிஞ்சாக்கேணி மற்றும் கிண்ணியாவுக்கிடையில் பொது மக்களுக்கான போக்குவரத்து தற்போது படகு மூலமே இடம்பெறுகிறது.இந்த...

சனி, 17 ஏப்ரல், 2021

முள்ளியில் படையினரின் உத்தரவை மீறி தப்பிச்சென்ற பிக்-அப் ரக வாகனம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்து, தப்பிச் சென்ற ;பிக்-அப் வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளையடுத்து துன்னாலை பிரதேசத்தில் குறித்த ;பிக்-அப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது நெல்லியடி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதனை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தினரிடம்...

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இன்டியானாபொலிஸ் மாநிலத்தில் துப்பாக்கி சூட்டில் 8 பேர் மரணம்

அமெரிக்க வில்15-04-2021.வியாழக்கிழமை இரவு இண்டியானாபோலிஸின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஃபெடெக்ஸ் வசதிக்கு வெளியேயும் வெளியேயும் துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், பலரும் காயமடைந்தனர் மற்றும் சாட்சிகளை தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு ஓடினர் என்று போலீசார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் பொலிசார் இந்த வசதிக்கு அழைக்கப்பட்டனர்.  மார்ச் 22 அன்று கொலராடோவில் மளிகை துப்பாக்கிச்...

இளைஞர் ஒருவர் கிளிநொச்சியில் தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில்  இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்று (15.04.2021) இரவு இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்பகுதியின் கூரையில்  கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கோணாவில்  மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இதேவேளை கடந்த வாரம் இதே...

வியாழன், 15 ஏப்ரல், 2021

பாடசாலையில் தீப்பிடித்து நைஜரில் 20 மாணவர்கள் உடல் கருகி பலி

நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன....

ஜரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பேர் பலி

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது.இந்தநிலையில்...

திங்கள், 12 ஏப்ரல், 2021

அமரர் வேலுப்பிள்ளை ஜெயச்சந்திரன்.16ம் ஆண்டு நினைவஞ்சலி 12-04-2021

திதி -12-04-2021.இன்று .  ஆண்டவன் அடியில் 00 .04. 2005யாழ் வல்வேட்டித்துறையை பிறப்பிடமாகவும்,  தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை ஜெயச்சந்திரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிதுஎல்லாம் வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்துசொல்லிய புகழுடனே யாவும் பெற்றுநல் மனையான் சரோசினியுடன்  நல்லறத்தை நடத்திய எம்(ஜெயசந்திரன்)மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்தொடக்கி...

அமரர். சபாரத்தினம் ஞானமணி, 5ம் ஆண்டு நினைவஞ்சலி 12-04-2021

உதிர்வு .08.04.2016 - நினைவஞ்சலி- 12-04-2021        யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த  அமரர்.சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 5ம் ஆண்டு .நினைவஞ்சலி 12-04-2021 இன்று காலச்சுழற்சியில் ஐந்து ஆண்டுகள் கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை நித்தம் நாம் இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை!...

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நாடு முழுவதும் இன்று முதல் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள்

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.எனவே, அனைத்து மக்களும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்...

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

அகால மரணம் அமரர் சின்னராஜா (அப்பன்) வித்தகன் 08-04-2021

பிறப்பு-11-09-2002--இறப்பு--08-04-2021.  யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பில்  வசித்துவந்த திரு தம்பு சின்னராஜா (அப்பன்)நந்தினிதம்பதிகளின் மூன்றாவது மகன் (பிறப்பிடம் கொழும்பு ) வித்தகன் அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை  அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு பறுபதம்  தம்பதிகனதும்  மற்றும்  காலிங்கராஜாதம்பதிகளின் அன்புப் பேரனும் சுருதி சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,...

வியாழன், 8 ஏப்ரல், 2021

இரத்மலானையில் 27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்

தனது வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபாய் பணத்தை  கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடக பேச்சாளர் பிரதி  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிலாவரை.கொம்...

செவ்வாய், 6 ஏப்ரல், 2021

யாழ்.இருபாலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த இளம் யுவதி

இளம் யுவதி ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது ‘யாழ்ப்பாணம் -மடத்தடி, இருபாலை கிழக்கு கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இனுஜா என்கின்ற 21 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அவரது வீட்டில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இவரது, இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக தகவல்...

வனாத்துவில்லுவவில் பரீட்சை எழுதிய மாணவி மயங்கி விழுந்து மரணம்

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம், புத்தளம்- வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு...

திங்கள், 5 ஏப்ரல், 2021

நாட்டில் பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை அகற்ற நடவடிக்கை

உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது:-இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு.05-04-2021. இன்று இரவு வெளியாக்கப்படவுள்ளது.அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலாவரை.கொம் செய்திகள் >>>...

பரந்தன் வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலி மகன் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.இன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும் மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயராசா என்பவர் உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில்...