siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 மார்ச், 2023

மிருசுவில் கரம்பகம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொடூரமாக வெட்டிக் கொலை

யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மிருசுவில் கரம்பகத்தில் உள்ள தோட்டக் குடிலில்.31-03-2023. இன்று காலை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் வயது 43 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழும் இவர் தோட்டத்தில் தங்குவதை...

மல்லாவி கொல்லவிளாங்குளத்தில் திருமணமாகி 5 மாதங்களில் உயிரிழந்த பெண்

முல்லைத்தீவு – மல்லாவி கொல்லவிளாங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் 23-03-2023-அன்று  இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவது,வீட்டில் இருந்து மின்சாரத்தினை வெளியில் முற்றத்தில் வெளிச்சம் போடுவதற்காக எடுக்கப்பட்டிருந்த நிலையில், மின்சார வயரினை பிடித்த வேளையிலேயே குறித்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வயதான பிரபாகரன் சுதாஜினி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த...

வியாழன், 30 மார்ச், 2023

ருவாண்டா வைத்தியசாலையில் 5 இலங்கை தமிழ் அகதிகளின் விபரீத முடிவு

இலங்கையை சேர்ந்த ஐந்து தமிழ் அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.ருவாண்டா தலைநகரமான கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் 5 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தையல் ஊசியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி22 வயதான யுவதியையும் இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே யுவதி தையல் ஊசியை பாதியாக உடைத்து இரண்டு துண்டுகளையும் விழுங்கியுள்ளார்.இந்நிலையில் வைத்தியசாலையில்...

புதன், 29 மார்ச், 2023

இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

நாட்டில்  பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து 28-03-2023-அன்று பிற்பகல் 5 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏ9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது பின்னால் சென்ற கனரகவாகனம் மோதிதில் சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.சடலம்...

செவ்வாய், 28 மார்ச், 2023

அமெரிக்காவில் கணவரை பலி வாங்க இரு பிள்ளைகளை கொன்ற மனைவி

அமெரிக்காவை சேர்ந்த வெரோனிகா யங்ப்ளட் (37) என்ற பெண் தனது முன்னாள் கணவரை பலி வாங்குவதற்காக தனது மகள்களை கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.வெரோனிகா தனது மகள்களான சரோன் (15), யங்ப்ளட் (5) ஆகியோரை கொலை செய்ததற்காக மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் குற்றமற்றவர் என்று கடந்த ஒகஸ்ட் 15  ஆம் திகதி ஒப்புக்கொண்டுள்ளார்.அவர் மீது இரண்டு முதல் நிலை கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் வேண்டுகோளை நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும்...

திங்கள், 27 மார்ச், 2023

மரண அறிவித்தல் திரு இளையதம்பி சங்கரப்பிள்ளை காலமானார்

யாழ் அச்சு வேலி  தோப்பை  பிறப்பிடாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் தோப்புப் போதிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னைநாள் தலைவரும் யாழ் இந்து கல்லூரி மற்றும் நைஜிறியாஆகியவற்றில் ஆசிரியராகக் கடமையாறிய அவர் பின்னர் இறுதி வரை கனடா ஸ்காபரோவை வதிவிடமாகக் கொண்டு நீண்ட காலம் இங்கு வாழ்ந்தார்.அத்துடன் , பல சமூக சேவைகளை கனடாவிலும், தனது பிறப்பிடமான தோப்புர் போத்தி பிள்ளையார் தேவஸ்தானத்துக்கும் அரும் சேவையாற்றிய அவர் ஒரு சர்வதேச கவிஞர் என்ற...

ஞாயிறு, 26 மார்ச், 2023

: வீடொன்றில் இருந்து பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

பரிசில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை நேற்று சனிக்கிழமை மாலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..24-03-2023. வெள்ளிக்கிழமை காலை வீட்டில் இருந்து புறப்பட்ட கணவன், 25-03-2023.நேற்று சனிக்கிழமை மாலை வீடு திரும்பியபோது, அவரது யில்  மிக மோசமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், வீட்டின் வரவேற்பறையில் கிடந்தாதாக அறிய முடிகிறது.உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர்...

சனி, 25 மார்ச், 2023

வரலாறு காணாத பனிப்புயல் பாதிப்பால் அமெரிக்காவில் 23 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலை நிழவி வருகின்றது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன.சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.மேலும், பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின்...

வெள்ளி, 24 மார்ச், 2023

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.12ம் ஆண்டு நினைவஞ்சலி 24.03.2023

மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி 24-03-2023.வெள்ளிக்கிழமை இன்று இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும்...

வியாழன், 23 மார்ச், 2023

ஏழு பிரித்தானிய பிரஜைகள் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சையால் :உயிரிழப்பு

துருக்கியில் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஏழு பிரித்தானிய பிரஜைகள் மரணமடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும் சிலர் மிக மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கின்றனர்.அறுவைச் சிகிச்சையின்போது 70 சதவீதமானவர்களுக்கு வயிற்றுப் பகுதி அகற்றப்படுகிறது. மிகக் கடுமையான உடல் பருமன் பிரச்சினையைக் கொண்டவர்களுக்குப் பிரித்தானியாவில் அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.இருப்பினும், அங்குள்ள மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை...

புதன், 22 மார்ச், 2023

உடுப்பிட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் மரணம்

யாழ் உடுப்பிட்டி  பகுதியில் வீடு ஒன்றில் கம்பி ஒன்றினை பயன்படுத்தி சிற்ப வேலைகளில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின் தாக்கம் இடம்பெற்றது.இதன்நகாரணமாக தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை வல்வெட்டித்துறை பிரதேச மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இளைஞன் ஒருவன் மரணம் அடைந்துள்ளான்.மரணமடைந்தவர்  27 வயதுடைய நிலக்காடு காரைநகரை  சேர்ந்த குமாரசாமி சுதன் எனும்  ஒரு...

செவ்வாய், 21 மார்ச், 2023

எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

 வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் நான்கு இளைஞர்கள்  நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இச்சம்பவம் இன்றைய தினம் (21-03-2023) காலை இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>&...

திங்கள், 20 மார்ச், 2023

. நெடுஞ்சாலையில் பங்களாதேஷில் கோர விபத்து! 17 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தகர்த்துக்கொண்டு பஸ் வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலச்சரிவுகள், பாறைகள் சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

சனி, 18 மார்ச், 2023

அராலி சந்தியில் பட்டா ரகவாகனம் பேருந்து மீது மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில்.18-03-2023. இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,ஊர்காவல்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் நயினாதீவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இச்சம்பவத்தில்...

வெள்ளி, 17 மார்ச், 2023

நாட்டில் மரவெள்ளி கிழங்கின் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில்  சமீபகாலமாக நாடு முழுவதிலும் உள்ள கிராம புறங்களில் 60 – 70 ரூபாய் வரை விற்க்கப்பட்ட மரவெள்ளி  மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் 200விலும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது மரவெள்ளி கிழங்கின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு 230 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

மரண அறிவித்தல் திரு வைரமுத்து விநாயகமூர்த்தி 16.03.2023

 பிறப்பு-15 03 1938-இறப்பு-16-03-2023.யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவற்கிரியை ,வாழ்விடமாகவும்  கனடா வை  வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி(இலங்கை), துரைராஜா(இலங்கை)...

வியாழன், 16 மார்ச், 2023

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இங்கிலாந்தில் ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம்...

புதன், 15 மார்ச், 2023

ஈரானின் தீ மிதிப்பு திருவிழாவில் பலியான பல உயிர்கள்: ஆயிரக்கணக்கானோர் காயம்

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. ஃபார்சி மொழியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ மிதி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.இந்த விழாவானது மார்ச் மாதம்...

செவ்வாய், 14 மார்ச், 2023

வேண்டுமென்றே கனடாவில் பாதசாரிகள் மீது வாகனத்தைச் செலுத்தியதில் இரண்டு பேர்பலி

கனடாவில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே வாகனத்தை செலுத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கனடாவின் கியூபெக் மாகாணத்தின் Amqui பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் இந்த விபத்து சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். பிக்கப் ரக வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதுண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.வாகனத்தின் சாரதி வேண்டுமென்றே பாதசாரிகள் மீது வாகனத்தை மோதச்செய்து உள்ளதாக தென்படுகின்றது என போலீசார் தெரிவிக்கின்றனர்.காயம்...

திங்கள், 13 மார்ச், 2023

விருத்தாசலம் பகுதியில் மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த முகேஷ் ராஜ் என்பவருக்கும் கிருத்திகா என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் படுத்திருந்த கிருத்திகா மீது இன்று அதிகாலை குடும்பப் பிரச்சனை காரணமாக மாமியார் ஆண்டாள் ஆசிட்டை வீசியுள்ளார். மேலும்,கொசு மருந்தான ஆல் அவுட்டை வாயில் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார்.அருகில்...

ஞாயிறு, 12 மார்ச், 2023

ஜப்பானில்பாடசாலையில் வீசிய கடும் துர்நாற்றம்: 9 மாணவர்களுக்கு நேர்ந்த நிலை

ஜப்பானில் உள்ள பாடசாலை ஒன்றில் வீசிய கடுமையான துர்நாற்றத்தால் 9 மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜப்பான் -  ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் பாடசாலை ஒன்றுள்ளது. இங்கு .09-03-2023. அன்று வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.அப்போது பாடசாலையில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக உணர்ந்தனர்.துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பாடசாலை ஊழியர்கள்...