இலங்கை முழுவதும் சுமார் 5 ஆயிரம் நுகர்வோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதாந்த மின்சாரக் கட்டணத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தாததால் காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் மின்சார விநியோகத்தை சீரமைக்க விண்ணப்பித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய 10% மின்சார இணைப்புகளை மீண்டும் பெறாமல் மக்கள் இருளில் உள்ளனர் என்றும் இலங்கை மின்சாரசபை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு மற்றும் கம்பஹாவில் நிலுவைத்தொகை செலுத்தப்படாத மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாக இலங்கை மின்சாரசபை
தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்கட்டணம் செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மின்தடை செய்ய வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக