துருக்கியில், உள்ள விமான நிலையம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் 39 இலங்கையர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது துருக்கியில் உள்ள இஸ்தான்புல் விமான
நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
மேலும், பணிப் பருவத்தை முடித்துக் கொண்டு குறித்த இலங்கையர் குழு, பஸ் ஒன்றில் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, இயூப்சுல்தான் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சுரங்கப்பாதையில் பயணித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் கிலிஹி பிரதான வீதியில் இருந்து
திடீரென குதித்து சுமார் 6 மீற்றர் பாறையில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அப்போது துருக்கி சாரதியுடன் 40 இலங்கையர்கள் பஸ்ஸில் இருந்ததாகவும் அவர்களில் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதிநிதி ஒருவரை இஸ்தான்புல் நகருக்கு அனுப்பவுள்ளதாக துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த இயூப்சுல்தான் தான் மாவட்ட ஆளுநர் இஹாசன் காரா,
“பேருந்து விபத்துக்குள்ளாகும் போது அதில் 40 பேர் இருந்தனர்.இருப்பினும், கடவுளுக்கு நன்றி, அவர்களில் யாருக்கும் பெரிய
ஆபத்து இல்லை, உயிர்ச்சேதம் இல்லை, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.
விபத்தில் 27 காயமடைந்துள்ளதாகவும், தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக