கட்டாக்காலி மாடு முட்டியதில் சிறுமி ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில், சிறுமி மருத்துவமனையில் அனுமதிகபப்ட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் ஜாஃபர் சித்திக் மற்றும் ஹஸ்ரின் பானு.
இவரது மூத்த மகள் ஆயிஷா (9) எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இன்று வழக்கம் போல பள்ளியை விட்டு தாய் ஹஸ்ரின் பானு அவரது இரு மகள்களையும் வீட்டிற்கு
அழைத்து சென்றுள்ளார்.விடாது சிறுமியை முட்டிய மாடுகள்
அப்போது தெரு வழியாக நடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற மாடுகள் திடீரென சிறுமியை கொம்பால் குத்தி
தூக்கி வீசியது.
பின்னர் கீழே விழுந்த சிறுமியை மாடு விடாமல் குத்திய நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு கற்களை மாடு மீது வீசி சிறுமியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.
எனினும் மாடு சிறுமியை குத்தி தூக்கிய நிலையில் இருந்த போது பிரம்பால் மாட்டை அடித்து துரத்தி குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
மாடு முட்டியதில் குழந்தைக்கு பல் மற்றும் கண்ணில் அடிபட்டுள்ளதால் அதற்கும் சிகிச்சை பார்க்க உள்ளதாகவும் , குழந்தையின் தலையில் நான்கு தையல்கள் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தாயுடன் வந்த குழந்தையை மாடு முட்டிய காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் முன்வைப்பட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக