மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது
ரெயில் மோதியது. இதனால், பேருந்து ரயிலில் சிக்கி, தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர், மேலும் பதினேழு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மீட்கப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மெக்சிகோ ரயில் சிக்னல்கள்
மற்றும் தடைகள் குறைபாடுகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக