ராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 300 கிலோ ஆப்பிரிக்கன் தேலி மீன் பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டினம்காத்தான் ஈசிஆர் சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது அங்கிருந்த மீன் வண்டியில் இந்த மீன்
இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில் பரமக்குடியில் இருந்து உச்சிப்புளிக்கு உணவுக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த மீனை பட்டினம்காத்தான் மேம்பாலம் அருகே குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக