நாட்டில் இந்த வருடத்தில் அதிகளவான தொழுநோயாளர்கள் கொழும்பு – மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விபரங்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.09-08-2023-.இன்றையதினம் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக்க இது குறித்து விபரித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி மஞ்சுளா திலகரத்ன
குறிப்பிடுகையில்,
மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவில் வருடாந்தம் சுமார் 120 தொழுநோயாளர்கள் பதிவாகின்றனர். இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மொரட்டுவையில் 51 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக