குறைந்த வயதில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும் சர்பாக்டான்ட் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு மருத்துவமனைகளில் இன்னும் சில நாட்களுக்கு போதுமான அளவு மட்டுமே மருந்து இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைத்தியசாலைகள் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, மருந்து தட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்த அவர், இன்னும் ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு
காணப்படும் என்றார்.
இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்துள்ளமையே இந்த சர்பாக்டான்ட் மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் என சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக