வவுனியா, பூவரசங்குளம், மதுக்குளம் ஏரிக்கரையில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம்
பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் பின்னால் பயணித்த வேளையில் உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கரையில் இருந்து தவறி விழுந்ததில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சதுஷான் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.
காயமடைந்த மற்றைய குழந்தையும் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக