கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்
அறிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் 22-09-2023.அன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு - கன்னட பிரதான வீதியின் பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக