siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

இந்தியாவில் ஆத்திரத்தில் மாணவன் தாக்கியதில் சக மாணவன் ஆபத்தான நிலையில்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சதர்காட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். இவருடைய சக வகுப்பு 
மாணவனான கைஃப் தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைஃப் சையத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். கைஃப் தாக்கியதில் படுகாயமடைந்த சையத்தை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது ஆரிப் கோமா நிலையில் உள்ளதாக 
கூறப்படுகிறது.
இது தொடர்பாக சையத்தின் பெற்றோர் மற்றும் சகோதரி அளித்த முறைப்பாட்டில், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிரிவியை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
அதில் சையத்தை கைஃப் தாக்கும் வீடியோ இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக